20 Nov 2014

கராத்தே பயிற்சியை புர்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

SHARE
கராத்தே பயிற்சியை புர்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தில் சோட்டாக்கன் கராத்தேயில் இந்த ஆண்டுக்கான (2014) பயிற்சி நிலையை பூர்த்திசெய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று புதன் கிழமை (19) நடைபெற்றது.
 
மட்டக்களப்பு, அரசடியில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் பயிற்சி மையத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் பிரதம பயிற்றுவிப்பாளரும் சங்கத்தின் ஸ்தாபகருமான கே.ரி.பிரகாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாணசபையின் பிரதி பிரதம செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா, மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் அதிபர் திருமதி கனகசிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பயிற்சியை நிறைவுசெய்த மாணவர்களின் பல்வேறு உடற்பயிற்சி கண்காட்சியும் நடத்தப்பட்டது.

இந்த பயிற்சி நிலையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சிகளை மேற்கொண்டுவருவதுடன் மொத்தமாக 600க்கம் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களில்  மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களில் இந்த ஆண்டு பயிற்சி நிலைகளை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதலே இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது 40 பெண் மாணவர்களும் 60 ஆண் மாணவர்களும் பயிற்சி நிலை சான்றிதல்களைப் பெற்றுகொண்டனர்.

இதேபோன்று கடந்த மாதம் இப்பயிற்சி நிலையத்தில் பயிற்சி நிலைகளை பூர்த்திசெய்த 125 சிறுவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பயிற்றுவிப்பாளர் குகன் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள், சிரேஸ்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.









SHARE

Author: verified_user

0 Comments: