எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது முழுமையான ஆதரவை மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்போவதாக ஏறாவூர் நகர சபையின் மாதாந்த உத்தயோகபூர்வ அமர்வில் விஷேட தீர்மானமொன்று இன்று (20) நிறைவேற்றப் பட்டுள்ளது.
நகர சபையின் உபதவிசாளர் எம்.ஐ.எம் தஸ்லிம் தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்ற அமர்வில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் எம்.எல் ரெபு பாசம் பிரேரணையை முன்மொழிய உறுப்பினர் ஐ.ஏ.வாசித் வழிமொழிந்தார்.
அந்த உறுப்பினர்கள் அப்பிரேரணை மீதான உரையையும் நிகழ்த்தினர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் அபிவிருத்திப் புரட்சியை ஏற்படுத்தி அனைவருக்கும் நிம்மதியைத் தரக்கூடிய வரவு-செலவுத் திட்டத்தை முன்மொழிந்துள்ளதுடன் பொதுமக்களுக்குச் சொல்லிக்கொள்ள முடியாது வெட்கப்பட வேண்டியளவு மாதாந்தக் கொடுப்பனவை இதுகாலவரை பெற்றுவந்த உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவை மனநிறைவானதாக அதிகரித்துள்ளதனால் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளதாகவும் உறுப்பினர் ரெபு பாசம் குறிப்பிட்டார்.
தவிசாளர் தவிர்க்கமுடியாத காரணத்தினால் சபை அமர்விற்கு சமுகமளிக்காததையடுத்து உபதவிசாளர் எம்.ஐ.எம் தஸ்லிம் தலைமையில் அமர்வை நடாத்துமாறு உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையினையடுத்து அமர்வு நடைபெற்றது.
மாதாந்த அமர்வில் உறுப்பினர்களான அமீன் இஸ்ஸத் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான ஜேஎம் முஸ்தபா ஏஆர் பிரவுஸ் சுயேச்சைக் குழு உறுப்பினர் பீ கஜேந்திரகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0 Comments:
Post a Comment