20 Nov 2014

மாவட்டக்களப்பில் 24 மணித்தியாலங்களில் 45.6 மில்லி மீற்றர் மழை, வீதியை ஊடறுத்து மழை நீர் பாய்கிறது.

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று புதன் கிழமை (19) காலை 8.30 மணியிலிருந்து இன்று வியாழக் கிழமை காலை 8.30 மணிவரையான 24 மணித்தியாலங்கிளில் 45.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் நிலையப் பெறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் கூறினார்.


மட்டக்களப்பு மாவட்டதில் பரவலாக நேற்று காலையிலிருந்து பெய்து வருகின்ற மழை வீழ்ச்சி தொடர்பில் இன்று காலை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் கூறினார்.


அந்த வiயில் மட்டக்களப்பு மாவட்டம் நவகிரிப் பிரதேசத்தில் 61.0 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும். தும்பங்கேணிப் பிரதேசத்தில் 72.3  மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரி பிரதேசத்தில் 50.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், வாகரைக் கட்டுமுறிவு பிரதேசத்தில் 16.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சைப் பிரதேசத்தில் 40.0 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமம் பிரதேசத்தில் 68.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளி பிரதேசத்தில் 32.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பாசிக்குடாப் பிரதேசத்தில் 61.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பாழவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


இந்நிலையில் நேற்றிலிருந்து தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையினால் வெல்லாவெளிப் பிரதேசத்தில் அமைந்துள்ள மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து மழை நீர் பாய்வதனால் அவ்வீதியினைப் பயன்படுத்தும் பிரயாணிகள் சிராமதிதை எதிர் கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.




SHARE

Author: verified_user

0 Comments: