11 Nov 2014

மழை இன்மையால் பெரும்போக வேளாண்மைச் செய்கை பாதிப்பு விவசாயிகள் கவலை

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் மழை நீரை நம்பி தற்போது மேற்கொள்ளப் பட்டுள்ள பெரும்போக வேளாண்மைச் செய்கை போதியளவு மழை பெய்யாததினால் வெகுவாகப் பாதிக்கப் பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


தற்போது வடகீழ் பருவ பெயர்ச்சி மழைக்குரிய காலம் ஆரம்பித்து விட்ட போதிலும் இதுவரையில் வேளாண்மைச் செய்கைக்கு போதியளவு நீர் கிடைக்கவில்லை.


நெல்விதைத்து 2 மாதங்களாகியும் மழை இன்மையினால் உயரமான பகுதிகளிலுள்ள நெற்பயிர்கள் உஷ்னத்தினால் இறந்து போகும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளன. இதனை விட நிலக்கடலை, கௌப்பி, சோளன், பயறு, போன்ற மேட்டு நிலப் பயிர்களும் வெகுவாகப் பாதிக்கப் பட்டுள்ளதாக அப்பகுதி விவசாகிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


இந்நிலையில் படுவான்கரைப் பகுதியான பழுகாமம் கம நல கேந்திர நிலையத்திற்குட்பட்டு 2000 இத்திற்கு மேற்பட்ட வயல் நிலத்தில் தற்போது பெரும்போக வேளாண்மை, செய்கைபண்ணப் பட்டுள்ளது என கமநல அபிவிருத்தி உத்தியோகஸ்தர் தெ.வேளவேந்தன் கூறினார்.   


பழுகாமம் கமநல கேந்திர நிலையத்திலிருந்து இதுவரையில் 4500 இற்கு மேற்பட்ட உர மூடைகள் விவசாயிகளுக்கு ஒரு மூடை 350 ரூபாவீதத்திற்கு வினியோகிக்கப் பட்டுள்ளதாகவும், மாரி மழை பெய்யாதத்தினால் இப்பகுதி விவசாயம் பாதிக்கப் படவதாகவும், பழுகாமம் கம நல கேந்திர நிலையத்தின்  கமநல அபிவிருத்தி உத்தியோகஸ்தர் தெ.வேளவேந்தன் மேலும் கூறினார்.  

SHARE

Author: verified_user

0 Comments: