11 Nov 2014

முஸ்லிங்களும், தமிழர்களும் ஒன்றிணைவதை கிழக்கு மாகாணத் தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவே முடியாது – அருண்

SHARE

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்தால் கிழக்குத் தமிழர்கள் இன்னும் பாதிக்கப் படுவார்கள். ஏனெனில் கிழக்குத் தமிழர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை ஒருபோதும் நம்ப முடியாது. கிழக்குத் தமிழர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு பகடைக் காயாகப் பாவித்து அரசியல் தீர்வுக்கு வரமுடியாது.

என ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருண் தம்பிமுத்து கூறினார்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ_டன்  மேற்கொண்டு வரும் உறவு தெடர்பில் இன்று திங்கட் கிழமை (10) மேற்படி இணைப்பாளருடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்

எந்த அடிப்படையில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை நம்பமுடியும். என்ற கேழ்வியை நான் எழுப்ப விரும்புகின்றேன். 1987 ஆம் ஆண்டு தமிழ் முஸ்லிம் உறவுகளைக் குலைத்து முஸ்லிங்களைத் தனித்துவமாகக் கொண்டு சென்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு தமிழர்களின் எதிர் காலத்தைப் பாதுகாக்கப் போகின்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை நம்பி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன அருகதையில் பேச்சுவார்த்தையும், கூட்டாட்சியும் பற்றிப் பேசுகின்றார்கள். நாங்கள் அதனை ஒருபோதும் நம்ப முடியாது. தமிழர்களின் தனித்துவம் பாதுகாக்கப்படல் வேணடும் என்ற விடையத்தில் நாங்கள் மறந்துவிடக் கூடாது.

ஆட்சி நடக்க வேண்டுமாக இருந்தால் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிங்கள் என மூன்று சமூகமும் இணைந்துதான் ஆட்சி புரிய வேண்டுமே தவிர முஸ்லிங்களும், தமிழர்களும் ஒருபோதும் ஒன்றிணைய முடியாது.

முஸ்லிங்களும், தமிழர்களும் ஒன்றிணைவதை கிழக்கு மாகாணத் தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஏனெனில் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் பொருளாதார ரீதியிலும், அரசில் பலத்திலும் ஒரு தத்தழிக்கும் நிலையில் இருக்கும்போது  தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டுச் சேருவோம் என்றால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழர்களுக்காக இதுவரையில் எனைத் தெரிவித்திருக்கின்றது. எனவே இந்த இரு கட்சிகளின் கூட்டிணைவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ் தேசியம் இவ்வாறான  பாதையில் செல்லுமானால் கிழக்குத் தமிழர்கள் தமிழ் தேசியத்தைத் தூக்கிய எறியும் நிலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தள்ளப்படும். என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். என அவர் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: