11 Nov 2014

போரதிவுப்பற்று பிரதேச சபையினால் கழிவுகளைச் சேகரிக்கும் பணி 3 மாதகாலமாக நிறுத்தப் பட்டுள்ளது கழிவுகள் வீதி ஓரத்தில்

SHARE
  
மட்டக்களப்பு மாவட்டம் போரதிவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பழுகாமம் கிராமத்து மக்கள் தும்பங்கேணி - பழுகாமம் பிரதான வீதி ஓரத்தில் குப்பைகளைக் கொட்டி வருவதனால் வீதி ஓரத்தில் அண்டியுள்ள வயல் நிலங்களும், ஆற்றங்கரைப் பகுதியும் வெகுவாகப் பாதிக்கப் படுவதாக அப்பகுதி விவசாயிகளும் ஏனைய பொது மக்களும் தெரிவிக்கின்றனர்.


வீதி ஓரத்தில் உள்ள ஆற்றங்கரைப் பகுதியிலும், குப்பைகள் கொட்டப் படுவதனால் அழுகிய நிலையில் துர் நாற்றமும் வீசி வருகின்ற
இதனால் இவ்வீயைப் பயன்படுத்தும் பாடசாலை மாணவர்கள், வியாபாரிகள் பல பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.


போரதிவுப்பற்று பிரதேச சபை தமது கிராமத்திற்குள் வந்து குப்பைகளை
சேகரிக்கும் பணியினை தொடர்ந்து கடந்த 3 மாத காலமாக நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக தமது வீட்டுக் கழிவுகளை வைத்திருக்க முடியாமல் வீதி ஓரங்களில் கொட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளோம் என பழுகாமம் கிராமத்தவர்கள் தெரிவிக்கின்னறர்.


இது இவ்வாறு இருக்க போரதீவுப்பற்று பிரதேச சபையினால் பழுகாமம் பிரதேசத்தில் கழிவுகளைச் சேகரிக்கும் பணி கடந்த 3 மாத காலமாக நிறுத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான் அதனை நாம் ஏற்றுக் கொள்கினறோம். என போரதிவுப் பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.குபேரனை இன்று செவ்வாய்க் கிழமை (11) தொடர்பு கொண்டு இவ்விடையம் பற்றிக் வினவியபோது கூறினார்.


எமது பிரதேசத்தில் தொர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. மழையும் போதியளவு பெய்யவில்லை எனவே இப்பிரதேச மக்கள் மத்தியில் குடி நிர்ப் பஞ்சம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.


எமது பிரதேச சபையிலுள்ள சுத்திகரிப்பு ஊழியர்களை மக்களுக்காக குடிநீர் வழங்கும் செயற்பாட்டில் ஈடுபடுத்தியுள்ளோம். எமக்கு ஆளணிப் பற்றாக்குறையும் நிலவுகின்றது. இதனால்தான் நாம் பழுகாமம் பிரதேசத்தில் கழிவுகளைச் சேகரிக்கும் பணியினை தற்காலிகமாக நிறுத்தினோம்.


மழை பெய்து கிணறுகளில் நீர் ஊறத் தொடங்கியதும் எம்மால் தற்போது மேற்கொள்ளப் பட்டுவரும் குடி நீர் வினியோகம் நிறுத்தப்படடு தொடர்ந்து வழமைபோன்று கழிவுகளை சேகரிக்கும் பணியினைதத் தொடர்வோம் என போரதிவுப் பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.குபேரன் மேலும் கூறினார்.




SHARE

Author: verified_user

0 Comments: