6 Mar 2014

நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

SHARE
 (வரதன்)

கிழக்குப் பல்கலைக் கழக ஆசிரியர் சமூகம் அரசியல் பக்கச்சார்பற்றவர்களனெனவும் கிழக்குப் பல்கலைக் கழக ஆசிரியர் சமூகத்தின் நியாயமான கோரிக்கைகள் கடந்த 13 மாதங்களாக நிறைவேற்றப் படவில்லையென கிழக்குப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மட்டக்ளப்பு கல்லடியில் அமைந்துள்ள கிறீன் கார்டுன் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  தெரிவித்தார்.

விரிவுரையாளர்களின் நியமனங்கள் முறையற்ற விதத்திலும்  நியமிக்கப்படுவதாகவும் ஊழியர்களின் சம்பளம், விடுமுறை, பதவி உயர்வு,  ஒழுங்கற்ற முறையில் மேற்கொள்ளப் படுதல், நியமனங்கள் மேற்கொள்ளும் போது பீடாதிபதி தலையீடு செய்தல், பிரித்தாழும் தந்திரம், பிரதேச வாதம், தொலைபேசி மூலம் அச்சுறுத்தல், போன்ற நடவடிக்கைகள் தமது சங்கத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

உபவேந்தர் நியமனத்தில் சட்ட ஒழுங்கு மீறப்பட்டுள்ளதாகவும் இதனால் தமது செயற்பாடுகள் மிகுந்த மன உளச்சலுடன் மகிழ்ச்சியின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப் படத்தவறின்
ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவர எண்ணியுள்ளதாகவும்  கிழக்குப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத் தலைவரும் விரிவுரையாளருமான ரி ஜெயசிங்கம் தெரிவித்தார்.

இச்சங்கத்தின் செயலாளாரும்  விரிவுரையாளருமான கே.கருணாகரன் உபதலைவர் வர்ணகுலசிங்கம் மற்றும் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள்; இவ் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டனர். 






SHARE

Author: verified_user

0 Comments: