3 Mar 2014

பங்காரு அடிகளாரின் 74 வது அவதாரத்திருநாள்

SHARE
(சக்தி)

மருவூர் மகான் ஆன்மீகக் குரு பங்காரு அடிகளாரின் 74 வது அவதாரத்திருநாளும், களுவாஞ்சிகுடி சக்தி இல்லத்தின் 14 வது ஆண்டு நிறைவு விழாவும் இன்று திங்கட் கிழமை (3) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள சக்தி இல்லத்தின் மேல் மருவத்தூர் ஆதிபரா சக்தி சித்தர் பீட வார வழிபாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

களுவாஞ்சிகுடி சக்தி இலத்தின் தலைவர் வி.இராலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் மு.கோபாலரெட்ணம், களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் பிரத குரு சிவஸ்ரீ மு.முத்துக்குமாரக் குருக்கள் . சிறுவர் நன்நடத்தை அதிகாரிகள், மற்றும் கிரம சேவை உத்தியோகஸ்தர்கள், கிராம பெரியோர்கள், பொதுமக்கள் இல்லச் சிறுமிகள், பக்தர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இன்றய தினம் காலை 7 மணியளவில் ஆதிபராசக்தி அன்னைக்கு பூஜை வழிபாடும், பாத பூஜையும், நடைபெற்று  காலை 8 மணியளவில் பங்காரு அடிகளாரின் திருவுருவப்படம் தாங்கியவாறு பக்கதர்கள் களுவாஞ்சிகுடி பிரதான வீதிவழியாக ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் பங்காரு அடிகளாரின் 74 வது அவதாரத் திருநாளை முன்னிட்டு 74 தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடுகளும் நடைபெற்றன.

பின்னர் இந்நிகழ்வில் இல்லத்தின் மாணவியர்களின் கலை நிகழ்வுகள் மேடையேற்றப்படதோடு, சமயற் சொற்பொழிவுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

SHARE

Author: verified_user

0 Comments: