6 Mar 2014

SHARE
(சக்தி)
இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனம் எதிர் வரும் சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மாவட்ட செயலகத்துடன் இணைந்து நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பினை ஏற்படுத்தவுள்ளதாக இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தின் சிரேஸ்ட தயாரிப்பாளர் எஸ்.மோசஸ் தெரிவித்தார்.

எதிர்வரும் ஏப்ரல் மாம் 14 ஆம் திகதி சித்தரைப் புத்தாண்டு தினத்தன்று காலை 6 மணிமுதல் இரவு 12 மணிவரை நேரடி ஒளிபரப்பிரை ஏற்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்ககளப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்ச்சிப்பிரிவு பணிப்பாளர் ஆர்.ரவீந்திரன், சிரேஸ்ட தயாரிப்பாளர் எஸ்.மோசஸ். தயரிப்பாளர், பி.குரூஸ், மற்றும் பிரதேச செயலாளர்கள், கலாசார உத்தியோகஸ்தர்கள், விளையாட்டு உத்தியோகஸ்தர்கள் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், இராணுவத்தினர் என பலர் இதில் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியம், கலை காலாசார நிகழ்வுகள், பாரிம்பரிய விளையாட்டுக்கள், போன்ற பல விடையங்களோடு பூஜை நிகழ்வுகளையும் அன்றயத்தினம் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்வது எனவும் தீர் மானிக்கப்பட்டுள்ளதாக  இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தின் சிரேஸ்ட தயாரிப்பாளர் எஸ்.மோசஸ் மேலும் தெரிவித்தார். 

















SHARE

Author: verified_user

0 Comments: