30 Jan 2014

செட்பாளையம் கிராமம் பல்வேறுபட்ட அபிவிருத்திளைக் கணடு வருகின்றது.

SHARE
  (பிரசாத்)

செட்பாளையம் கிராமத்தில் பல்வேறுபட்ட அபிவிருத்திகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அவற்றுள் செட்பாளையம் சிவன் ஆலயம் சமயப் பணியோடு நின்று விடாது சமூகப் பணியினையும் முன்னெடுத்து வருகின்றது. கிராம மக்களுக்கு எது தேவையோ அவற்றினை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றி வருகின்றது. கல்விப் பொதுத்தர சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இலவசமாக பகுதிநேர வகுப்பினையும், நவீன வசதி கொண்ட பாலர் பாடசாலையினையும் ஆரம்பித்து இந்த சிவன் ஆலயம் நடாத்தி வருகின்றது.
என கிழக்கு மாகண சுகாதார, சிறுவர் நன்னடத்தை, அமைச்சின் செயலாளர் கலாநிதி.எஸ்.அமலநாதன் தெரிவித்துள்ளார்.

 மட்டக்களப்பு-செட்டிபாளையம் கிராமத்தில அமைந்துள்ள சிவன் ஆலயத்தினால் திறக்கப்பட்ட “சிவன் கிட்ஸ’ ஹோம்” எனும் நவீன வசதிகொண்ட பாலர் பாடசாலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்குகையில்.

செட்டிபாளையம் கிராமத்தின் முதலீடாகத்தான் நான் இந்த சிவன் ஆலய அமைப்பினைப் பார்க்கின்றேன். கல்வியிலே நாங்கள் சிறந்து மிளிர்வதற்கு சிறந்த அத்திவாரம் தேவை. பலமான அத்திவாராமில்லாத மாடிக்கட்டிடங்கள். சரிந்து விழுகின்றன அதுபோல் எதிர்கால உயர் கல்விக்கு ஆரம்பக் கல்வியான அத்திவாரம் தேவையாகவுள்ளது.

எதிர்காலத்தில் மாணவர்கள் கற்றலில் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்ள நேரிடுகின்றது. அந்த சிரமங்களை எதிர் கொண்டவர்களில் நானும் ஒருவன். கடந்த 1968 ஆண்டிலே இவ்வாறான ஒரு பாலர் பாடசாலை எங்களுக்கு இருக்கவில்லை அன்றய காலகட்டத்திலே பாடசாலைக் கல்வியினைத் தொடர்வதற்கு முன் எமக்குரிய வசதி வாய்ப்புக்களில்லை.

ஆனால் தற்போதைய உலயமயமாக்கல் சூழலில் ஏனைய கிராமத்து பிள்ளைகளுடன் , எனைய பிரதேசங்களின் பிள்ளைகளுடன் , போட்டிபோட்டு எமது பிள்ளைகளுக்கு கல்வி அறிவினை ஊட்டவேண்டிய போட்டித் தன்மை வாய்ந்த யுகத்தில் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இந்த பாலர் பாடசாலை இந்தப் பிரதேசத்திலே நல்ல தரத்திலாலான விதைகளை உருவாக்கும் என்பதில் எதுவித ஐயமும்மில்லை. எதிர் காலத்தில் இதன் விளைவுகளை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கும். என அவர் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ் அவர்கள் கருத்து தெரிவிக்குகையில்
கல்வியியலாளர்களை அதிகம் கொண்ட கிராமமாக செட்டிபாளையம் கிராமம் காணப்படுகின்றது. இதனைப் பார்க்கின்றபோது எனக்கு பொறாமை வருகின்றது எனது அட்டாளைச்சேனைக் கிராமத்தில இவ்வாறு அதிகளவு கல்வியியலாளர்கள் இல்லையே என்று.
செட்டிபாளையம் சிவன் ஆலயத்தினர் ஆத்மீக செயற்பாடுகளோடு மட்டுமல்லாமல் ஏனைய சமூகப் பணியினையும் மேற்கொண்டு வருவதானது இப்பிரதேசம் துரித கதியில் அபிவிருத்தி கண்டுவிடும் என நினைக்கின்றேன். 

யார் என்ன சொன்னாலும் மனிதர்களாகிய எமக்குத் தேவையானது ஆரோக்கியமான சிந்தனைகளும், செயற்பாடுகளுமேதான். கிழக்கு மாகாண சபையின் உள்ளுராட்சி, மற்றும் பாலர் பாடசாலை பணியகம் போன்றன எமது அமைச்சின் கீழ் உள்ளதனால் உங்களுக்கு எமது அமைச்சிலிருந்து என்ன என்ன தேவையோ அவைகளை பெற்று அபிவிருத்தி செய்யுங்கள் என்று.
சகல துறைகளிலும் செட்டிபாளையம் கிராமம் முன்னணியில் திகழ்வது போன்று எதிர் காலத்தில் பாலர் பாடசாலைக் கல்வியிலும் முன்னணியில் திகளும் என்ற நம்பிக்கை உள்ளது. என அர் தெரிவித்தார்

இதேவேளை இந்நிகழ்வில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.பாஸ்கரன் அவர்கள் கருத்து தெரிவிக்குகையில். 

சமூகத்தில் பல சாதகமான மாற்றங்கள் தேவை அவ்வாறு மாற்றங்கள் இருந்தால்தான் அபிவிருத்திகள் நடைபெறும். இவ்வாறான மாற்றத்தில் ஒன்றுதான் இன்று ஆரம்பிக்கப் பட்டுள்ள நவீன வசதிகொண்ட பாலர் பாடசாலையாகும். உயர் கல்வியினைத் தொடர்வதற்கு பாலர் பாடசாலைக் கல்வி மிக மிக அவசியமாகும்.

அந்த வகையில கிராமத்தினல் மத்தியில் இங்கு புதிதாக அமையப் பெற்றுள்ள இந்த பாலர் பாசாலை அமைந்துள்ள இடம் கடந்த 1990களில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிரு;தது. தற்போது அந்த முகாம் வெளியேறிய பின்பு மாணவர்களின் ஆரம்பக் கல்விக்கு அத்திவாரமிடும் இடமாக மாறியுள்ளது.
சிவன் ஆலயத்தினர் இவ்வாறு கல்விக்காக ஆற்றிவரும் செயற்பாடுகள் போன்று ஏனைய அமைப்புக்களும் இவ்வாறு தமது சமூகப் பணிகளை துரிதப் படுத்த வேண்டும்.

இந்த செட்டிபாளையம் கிராமம் பல கல்விமான்களை உருவாக்கிய கிராமமாகும். அவர்கள் அனைவரும் இங்கு அமைந்துள்ள மகாவித்தியாலயத்தில் தான் கல்வி கற்றவர்கள். எனவே பல கல்விமான்களை உருவாக்கிய செட்டிபாளையம் கிராமத்தில் அமைந்தள்ள மகாவித்தியாலத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமாக இருந்தால் இங்கு பாலர் பாடசாலைக் கல்விகளில் அக்கறை செலுத்தி எதிர்கால சந்ததியினரின் அடிப்படைக் கல்விக்கு வித்திட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: