30 Jan 2014

பட்டிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின்- நாகதம்பிரான் பரிபார ஆலயம் உடைப்பு

SHARE
(சக்தி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு சந்தியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தினுள் அமைந்துள்ள பரிபாரத் தெய்வமான நாகதம்பிரான் ஆலயம் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப் பட்டு அதனுள்ளிருந்த செப்புத் தகடு களவாடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வழக்கம்போல் நேற்று மதியம் (29) பூஜைகள் நிறைவுற்று ஆலயம் பூட்டிவிட்டு வந்ததாகவும் இன்று (30) மதிய பூiஐகளுக்காக வேண்டி மூல மூர்தியாகிய ஸ்ரீ சித்தி விநாயகரையும் ஏனைய பரிபாரத் தெய்வங்களையும் கழுவி துப்பரவு செய்து வரும் வேளையில் நாகதம்பிராம் ஆலயம் உடைக்கபட்டுள்ளதனை அவதானித்ததாக ஆலய குருக்கள் தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்றுஇரவு (29)  நடைபெற்றிருக்கலாம் என ஆலய நிர் வாகம் தெரிவிக்கும், அதேவேளை இது குறித்து களுவாஞ்சிகுடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேற்படி ஆலய நிர்வாகத்திரனர் தெரிவிக்கின்றர்.
இவ்விடயம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: