30 Jan 2014

சமூர்தி வங்கி தகர்ப்பு

SHARE


மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்கான சமுர்த்தி வங்கி சங்கம் நேற்றிரவு இரவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது என சமுர்த்தி வங்கி முகாமையாளர் என்.ஜெயசீலன் தெரிவித்தார்.

இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் தியாவட்டுவான் பிரதேசத்தில் அமைந்துள்ள வங்கி சங்கத்தின் வேலி மற்றும் முன்பக்க கதவினை உடைத்து உட்சென்றவர்கள் காசு வைக்கும் இரும்புப் பெட்டியை உடைப்பதற்கு முயற்சித்துள்ளதுடன் அலுமாறி மற்றும் மேசை லாட்சிகளை சேதப்படுத்தியுள்ளனர் எனவும் முகாமையாளர் தெரிவித்தார்.

எனினும் வங்கியில் இருந்து எந்தப் பொருட்களும் திருடப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE

Author: verified_user

0 Comments: