30 Jan 2014

அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள்.

SHARE

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகளில்  இந்த வருடம் மேற்கொள்ளப்படவுள்ள விசேட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராயும் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டங்கள் எதிர்வரும் 31ஆம் திகதியிலிருந்து  பெப்ரவரி 14ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவுக்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் 31ஆம் திகதியும் கோறளைப்பற்று மேற்கு மற்றும் மத்தி பிரிவுகளுக்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் முதலாம் திகதியும்  கோறளைப்பற்று வடக்கு மற்றும் கோறளைப்பற்று பிரிவுகளுக்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் 7ஆம் திகதியும் மண்முனை தென்னெருவில்பற்றுஇ போரதீவுப்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் 10ஆம் திகதியும் மண்முனை மேற்கு மற்றும் மண்முனை தென்மேற்கு  பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் 11ஆம் திகதியும்  காத்தான்குடி மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் 12ஆம் திகதியும்  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கான  அபிவிருத்திக்குழுக் கூட்டம் 13ஆம் திகதியும் கோறளைப்பற்று தெற்கு மற்றும் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம்  14ஆம் திகதியும் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார். 

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 513 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் மேற்படி கூட்டங்களில் ஆராயப்பட்டுஇ திட்டங்கள் அங்கீகரிக்கப்படும். இதன் பின்னர் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு திட்டங்கள் அங்கீகரிக்கப்படும் எனவும் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: