நூலக நிறுவனத்தின் கூட்டாண்மைகளை கட்டியெழுப்பும்
நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்ட செயலமர்வு.
மட்டக்களப்பு மாவட்ட கலைஞர்களின் ஆவணங்களை எண்ணிமப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடலானது, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் ஒத்துழைப்புடன் உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவனின் வழிகாட்டலில் கடந்த செவ்வாய்கிழமை (30.06.2026) மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில், நூலக நிறுவனத்தின் பிரதமர் நிறைவேற்று அலுவலர் ரஞ்சுதமலர் நந்தகுமார், நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகஸ்த்தர்கள்,பதவி நிலை உத்தியோகத்தர் கே.எம்.றிழா உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டனர்.
நூலக நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அலுவலர் றஞ்சுதமலர் நந்தகுமாரின் நூலக நிறுவனத்தின் அறிமுகம், மட்டக்களப்பு பிராந்திய ஆவணப்படுத்தல் செயற்றிட்டம் மற்றும் அதன் அவசியம் ஆகியவை தொடர்பாகத் தெளிவுபடுத்தினார்.
மேலும் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக எல்லைகளுக்குள் அவசரமாக ஆவணப்படுத்தப்பட வேண்டிய முக்கிய விடயங்கள், அவற்றை அடையாளங்கண்டு ஆவணப்படுத்தும் வழிமுறைகள், மற்றும் ஆவணப்படுத்தலின் நேர்மறையான விளைவுகள் தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டதுடன், அவர்களிடமிருந்து பல காத்திரமான பதில்களும் முன்வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலக
ரீதியாக மாவட்டத்தின் வரலாறு, பண்பாடு, மரபுரிமை. சமூக வாழ்வியல் பாரம்பரிய அறிவு,
நாட்டார் கலைகள், மத மற்றும் கலாசார மரபுகள், முக்கிய ஆளுமைகள், கல்வி பொருளாதாரம்,
சுற்றுச்சூழல், கிராம வரலாறுகள், தொல்பொருள் மற்றும் பாரம்பரியச் சின்னங்கள் உள்ளிட்ட
அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய விரிவான ஆவணப்படுத்தல் செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கு
நூலக நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற உத்தியோகத்தர்களை
நூலக நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் ஆவணப்படுத்தல் செயற்பாடுகளுடன் தொடர்ச்சியாக
இணைத்துக்கொள்வது தொடர்பாகவும், ஆவணப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய
பங்களிப்புகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment