24 Jun 2026

களுமுந்தன்வெளி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் ஐந்து பாடல்கள் வெளியீடு..

SHARE

களுமுந்தன்வெளி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் ஐந்து பாடல்கள் வெளியீடு.

பாடலாசிரியரும் ஊடகவியலாளருமான வடிவேல் சக்திவேல் எழுதிய மட்டக்களப்பு களுமுந்தன்வெளி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் மகிமை அடங்கிய ஐந்து பாடல்கள் இன்று செவ்வாய்க்கிழமை (23.06.2026) ஆலய முன்றலில்  வெளியீடு வைக்கப்பட்டுள்ளது. 

இப்பாடலுக்கான இசையை இலங்கை டி.ரி.எஸ் கிறியேசன் அண்ட் மியுசிக் அமைப்பின் இசையமைப்பாளர் திருச்சிற்றம்பலம் டினேஸ்குமார் இசையமைத்துள்ளார். 

இப்பாடல்களை கிழக்கு மாகாணத்தின் புகழ் பூத்த பாடகர்களான ஜெயராஜ் டிலோஜி, திருச்சிற்றம்பலம் டினேஸ்குமார், செல்வப்பிரகாஸ், ஜெ.ரஜீன்திகா ஆகியோர் பாடியுள்ளனர். 

இப்பால்களை களுமுந்தன்வெளி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார், ஸ்ரீ  முத்துமாரிம்மன் ஆலயம். வெளியீட்டு வைத்திருந்த இந்நிகழ்வில் அக்கிராம பெரியோர்கள், ஆலய பரிபான சபைத் தலைவர் .சிவனேசராசா, பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது பாடலாசிரியர் ஆலய பரிபாலன சபையினரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.


















SHARE

Author: verified_user

0 Comments: