23 May 2015

கட்டுரை: தேசிய இளைஞர் தினத்தில் இளைஞர்களை கௌரவிப்போம்.

SHARE

இலங்கை திருநாடே இளைஞர் கையில். இன்று (மே 23) தேசிய இளைஞர் தினமாகும். இளைஞர்களின் பெறுமதியை உணர்த்தும் தேசத்தின் வளர்ச்சியில் அவர்களை பங்கெடுக்கச் செய்வதன் மூலமே உண்மையான அபிவிருத்தியைக் காண முடியும் என்பதை இன்று எல்லா நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. அந்த வகையில் இளைய சமூகத்தினர் நாட்டின் சலாச்சார மற்றும் சட்ட பிரச்சினைகள் ஆகியவற்றில் பங்கு கொண்டு கவணம் செலுத்துதல் என்பது இன்றியமையாதது ஆகும்.


எனவே சமூகத்தில் இளைஞர்களின் முயற்சிகளை அங்கீகரிப்பதும், தத்தமது சமூகத்தினர்களுக்கு சாதகமான பங்களிப்பை வழங்கும் வகையில் அவர்களது செயற்பாடுகளை ஊக்குவித்தலானது இளைஞர் தினத்தில் மேலும் விதைந்துரைக்கப்படுகிறது. இன்று அபிவிருத்தியை அடைந்துள்ள நாடுகள் அதன் பின்புலத்தில் தமது இளைஞர்களை முகாமை செய்வதில் கண்டுள்ள முன்னேற்றமே அடித்தளமாகப் பார்க்கப்படுகிறது.

இலங்கையில் தேசிய இளைஞர் தினம் என்பது 1999 ஆம் ஆண்டிலிருந்து இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வருடா வருடம் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபை இளைஞர்கள் என்பதை 15-24 வயதுக்குற்பட்ட ஆண், பெண்களைக் குறித்துக்காட்டினாலும் நமது நாடு 13-29 வயதுக்கிடைப்பட்டவர்களை இளைஞர்கள் என்று மகுடம் சூட்டுகின்றது. இத்தகைய வயதினர் மொத்த இலங்கைச் சமூகத்தில் நான்கிலொரு பங்கினராகும். எனவே தேசிய அபிவிருத்தியில் இலங்கையினரின் முக்கியத்துவத்தை எமது நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் உணர்ந்து கொண்டதன் விளைவே இளைஞர்களுக்கான தேசிய தினம் பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஐ.நா செயலாளர் பாங்கின்மூன் அவர்கள் குறிப்பிடுவது போல இளைஞர்களை முதலீடு செய்யாத பொருளாதாரம் முறையான ஒன்றல்ல. அவ்வாறான முதலீடு எதிர்காலத்தில் அனைவருக்கும் மிகுந்த பயன் தரும் என்பதே இதற்கு வித்திட்டுள்ளது. தேசிய இளைஞர் தினம் எமது நாட்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாட்டில் அனைத்து மாவட்டத்திலும் அணு~;டிக்கப்படுகிறது. இதன் பிரதான என்னப்பாடாக இளைஞர் கழக செயற்பாட்டினூடாக இந்த நாட்டிற்கு அளப்பெரிய சேவையாற்றிய, சாதனை படைத்த இளைஞர்களை கௌரவித்தல் என்பது அமைகிறது. ஏனெனில் சமூகத்தில் இளைஞன் என்பவன் வகிக்கின்ற முக்கியத்துவமும், சமூகத்திற்குப் பிரயோசனமற்ற இளைஞர்கள் அல்லது சமூகத்தில் குழப்பம் விளைவிக்கும் இளைஞர்களினால் ஏற்படும் விளைவுகளையும் ஆராய்ந்து, இளைஞர்களுக்கு சமூகப்பெறுமானத்தையும், உயர் இலட்சியங்களையும் அடைந்து கொள்ளும் வகையில் வழிவகைகளையும், வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுத்து அதன்பாலான நல்ல வினைத்திறன்மிக்க விளைவுகளை பாராட்டுவதும், கௌரவிப்பதும் சிறந்த நடவடிக்கையாகும் என்பதை உணர்ந்து தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் செயற்படுகிறது.

இளைஞன் என்பவன் யார்? அவனது இலக்குகள் எவை? தான் சார்ந்த சமூகத்திற்கு தன்னாலான பங்களிப்பு என்ன? என்பதை தனியொரு இளைஞனை உணரவைப்பதிலேயே இளைஞர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கு அடிப்படையாக அமைகிறது. இதனை குடும்பம், பாடசாலை, தான் சார் சமூகம் என்பன தீர்மானிக்கின்றன. இதற்கு மேலதிகமானதொரு வளப்படுத்தலை அந்தந்த இளைஞர்களை குழுவாக இணைப்பதன் மூலம் அடைவதற்கான வழிவகைகளை நமது அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. இதற்காக காலத்திற்கு காலம் இளைஞர் மேலாண்மைக்கும், மனித அபிவிருத்திற்குமான பெறுமதியான கொள்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இளைஞர்  அபிவிருத்தியில் ஏனைய நாடுகள் அடைந்த முன்மாதிரிகளும், சர்வதேச என்னப்பாடுகளும் உள்வாங்கப்பட்டு பயனுள்ள இளைஞர் சமூகத்தை உருவாக்கி அதன் மூலம் நாட்டை உயர் சவால்களிலிருந்து வெல்லுதலை இதன் மூலம் எதிர்பார்கப்படுகிறது. இதன் வெளிப்பாடாக 2014 இலங்கை இளைஞர்களுக்கான வருடமாகும், என்ற தொணிப்பொருளில் உலக இளைஞர் மகாணாடு இலங்கையில் நடாத்தப்பட்டதுடன், அதில் வரலாற்றில் முதல் தடவையாக கொள்கை வருப்பாளர்களும், இளைஞர் பிரதிநிதிகளும் கூட்டாக ஏற்றுக்கொண்ட இளைஞர் தொடர்பான கொழும்புப் பிரகடணம் மேற்கொள்ளப்பட்டு இளைஞர்களை கௌரவிக்கும் தேசிய திறன் தினம் பிரகடணப்படுத்தப்பட்டது.

சமூகத்தின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் இளைஞர்கள் பங்கு கொள்வது தவிர்க்க முடியாததாகும். தான் சார் சமூகத்தின் நடத்தைகளில் அவர்கள் கணிசமான பங்கினை எடுத்துக் கொள்கின்றனர். கல்வி, சலாசாரம், விளையாட்டு, சுயதொழில், சமய வழிபாடு மற்றும் சமூக தலைமைத்துவ செயற்பாடு என எல்லாவற்றிலும் இளைஞர்களின் ஈடுபாடு தொடர்வதைக் காணமுடியும். இளைஞர்கள் மானிட அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கான முக்கிய கருத்தியல் ஊடகமாக இருப்பதனாலும், கொள்கை வகுப்பு மற்றும் இளைஞர் மேம்பாடு தொடர்பான சீர்திருத்தத்திற்காக புதிய தளத்தை உருவாக்கி செயற்படுத்துவதன் மூலம் சிறந்த துறைசார் ஆளுமைகளையுடைய இளைஞர் வகுப்பை உருவாக்கிக் கொள்ள முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மானிட அபிவிருத்தியில் தாங்கள் செலுத்தும் தேசிய மட்ட பிரச்சினைகளை வெளிக்காட்டும் வகையில் உலகலாவிய மானிட அபிவிருத்தி அறிக்கைகளை தயாரித்து வெளியிடுகின்றன. இளைஞர்களுக்கும், நாட்டுக்கும் பாரிய அளவில் பயனளிக்கும் வகையில் கொள்கை அமுலாக்கத்தை மீள வலுப்பெறச் செய்வதை முதன்மைப்படுத்துவதன் ஊடாக அரசாங்கத்திற்கும், அரச சார்பற்ற துறைகளுக்கும் முக்கியமாக இளைஞர்களுக்கும், இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவதற்கு தளத்தை அமைத்தக் கொடுக்கும் பாரிய பணியை இலங்கை அரசு தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதை காணலாம். இன்று எல்லோரும் எல்லா விடயங்களிலும் மாற்றம் தொடர்பில் பேசுகின்றோம். சமூகத்தின், நாட்டின், உலகத்தின் மாற்றம் என்பது அது இளைஞர்கள் கைகளிலேயே உள்ளது. அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஏதுவான முகவர்கள் என்ற வகையில் பூரண உள்ளாந்தமிக்கவர்களாக செயற்பட்டு தமது சமூகத்தை வழி நடாத்தவும் சேர்ந்து நின்று அடுத்த கட்டத்திற்கு நாட்டை கொண்டு செல்லும் வேலையைச் செய்ய வேண்டும்.

சுவாமி விவேகாநந்தரால்  குறிப்பிடப்பட்டபடி உன்னிடம் இருக்கும் திறமையை நீ நினைத்துப்பார், எழுந்து நீ உன் ஞானத்தை வெளிப்படுத்து, உனக்குள் மறைந்திருக்கும் ஞானத்தின், அறிவின், சக்தியின் மகத்துவத்தை நீ உணர்ந்த அடுத்த நிமிடம், உலகம் உன்னிடம் வசப்படும் என்பது போல இளைஞர்களை ஒரு அறிவார்ந்த சகிப்புத் தன்மையும், தன்னம்பிக்கையும் வாய்ந்தவர்களாக கட்டியெழுப்ப இந்த தேசிய இளைஞர் தினத்தில் திடசந்தர்ப்பம் பூண வேண்டும்.

தற்போது எமது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் இளைஞர்களை வளப்படுத்தும் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நாடு எதிர்பார்க்கும் அபிவிருத்தி என்பது தனி மனிதன் சார்ந்த ஒன்றாக எதிர்பார்க்கப்படுவதால் அதன் பிரதான கருப்பொருள் இளைஞர்களை மையப்படுத்தியதாக இருக்கின்றது. இதனால்தான் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் சமூகம், பாடசாலை, பல்கலைக்கழகம், தொழிற்கல்வி நிறுவனம், உயர்கல்வி நிறுவனம் மற்றும் ஏ பெற்றுக்கொடுத்துனைய சமூக அமைப்புக்களின் செயற்பாட்டிற்கு ஒரு உந்து சக்தியாகவும், மேலதிக இளைஞர் மேலாண்மையையும் நாம் முன்னெடுக்க வேண்டியிருக்கின்றணது. தாம் வாழும் புறச் சூழலை எல்லோருக்கும் இசைவானதாக்குவதில் இளைஞர்கள் பிரதான பாத்திரமேற்று செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கிறோம். அதற்கான வழிகாட்டல்களையும், வழங்களையும் பெற்றுக்கொடுத்து சமூக அசைவியக்கத்தின் அச்சாணிகளாக இளைஞர்களை மாற்றுவோம்.

எம்.எல்.எம்.என். நைறூஸ்,
உதவிப்பணிப்பாளர்,
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்,
மாவட்டப்பணிமனை, 
மட்டக்களப்பு.

SHARE

Author: verified_user

0 Comments: