போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான துண்டுப்
பிரசுரங்கள் விநியோகம்.
சர்வதேச போதைப்பொருள் ஒளிப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் குருமண்வெளி பொது நூலகமும், களுவாஞ்சிகுடி பொது நூலகமும் இணைந்து போதை பொருள் ஒழிப்பு தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் களுவாஞ்சிக்குடி பொது சந்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று
பிரதேச சபை செயலாளர் எஸ்.யோகநாதன், நூலக உத்தியோகத்தர்களான சீ.ரவீந்திரன், திருமதி.லக்ஷ்மி
ரவீந்திரன், திருமதி.மோபிதா கவிதாஸ், பொது சுகாதார பரிசோதகர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் வாசகர் வட்டத்தினரும்
கலந்து கொண்டனர்.
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment