முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இறைபதம் அடைந்தார்.
சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி 1965,செப்டம்பர்,16, ல் மட்டக்களப்பில் பிறந்த ஆரிரியராக பணிபுரிந்தவர். இவர் வாழைச்சேனையில் திருமணம் முடித்து வாழ்ந்தவர் பின்னல் பகுதிநேர ஊடகவியலாளராக வீரகேசரி, தமிழ்நெட்ஆகியவற்றில் பணியாற்றியவர்.
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் உறுப்பினரான இவர் மாமனிதர் சிவராம், நாட்டுப்பற்றாளர் நடேசன், தற்போது புலம்பெயர்ந்து வாழும் சண் தவராசா, இரா.துரைரெட்ணம்,வேதநாயகம், மற்றும் பா.அரியநேத்திரன் உதயகுமார், பேரின்பராசா, சலீம் என பல்வேறு ஊடகவியலாளர்களுடன் இணைந்து பணியாற்றிய ஒருவர்.
2004 ,ஏப்ரல்,04, நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மூலமாக விடுதலைப் புலிகளால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களில் இவரும் ஒருவராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டார்.அந்த தேர்தலில் 44,457 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத்தெரிவானார்.
அந்த தேர்தலில் வரலாற்றில் முதல் தடவையாக ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பு மூலமாக நாடாளுமன்றம் சென்றோம் அதில் மறைந்த அமரர் கனகசபை, அமர்ர் தங்கேஷ்வரி, மாமனிதர் ஜோசப்பரராச்சிங்கம், தற்போது மரணித்த ஜெயானந்தமூர்த்தி மற்று பா.அரியநேத்திரன்
வடகிழக்கில் இருந்து தெரிவான 22, தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார்.
அந்த காலம் பல நெருக்கடிகள் அச்சுறுத்தல்கள் மத்தியில் எம்முடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வரமுடியாமல் இருந்த சமயம் 2006,யூலை மாதம் மட்டக்களப்பில் ஜெயானந்தமூர்த்தி வசித்த மட்டக்களப்பு பூம்புகார் வீதியில் உள்ள அவரின் வீடுமீது இனம் தெரியாத நபர்களால் ஆர்.பி.ஜி தாக்குதல் ஒன்றும் இடம்பெற்றது.
“அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள்” எனும் பெயரில் ஒரு நூலையும் 2008, காலப்பகுதியில் வெளியிட்டிருந்தார்.
அந்த காலப்பகுதியில் இருந்த அச்சுறுத்தல் காரணமாக 2008 ல் இவர் குடும்பத்துடன் புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் புலம் பெயர்ந்து வாழ்ந்தார்.
2010 மே மாதத்தில் நாடு கடந்த தமிழீழ அரசு தேர்தலிலும் லண்டனில் உறுப்பினர் தெரிவில் இவரும் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவாகியும் இருந்து பின்னர் விலகியும் இருந்தார்.
பின்னர் 2020, காலப்பகுதியில் மீண்டும் ஆளும்தரப்பு ஆதரவுடன் இலங்கைக்கு வருகை தந்து விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்த கருணாவால் உருவான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியில் சிலவருடங்கள் இணைந்து செயல்பட்டு அதிலும் இருந்து விலகியபின்னர்
2020, யூன்,07, ல் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியான துரோகி கருணாவின் கட்சியில் இருந்து தானாகவே விலகி மகிந்தவின் மொட்டுக்கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு வேட்பாளராக களமிறங்கி தோல்வியடைந்தார்.
இறுதியாக 2024, மேமாதம் சஜீத்பிரமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி இணைப்பாளராக நியமனம் பெற்று 2024, செப்டம்பர்,21, ஜனாதிபதி தேர்தல், 2024, நவம்பர்,14, பாராளுமன்ற தேர்தல் எல்லாவற்றிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்றிருந்தார்.
சுகவீனம் உற்ற நிலையில் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் சுமார் இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்ற நிலையில் இன்று 21/06/2026, பிற்பகல் 61, அகவையில் இயற்கை எய்தினார்.

0 Comments:
Post a Comment