20 Jun 2026

படிக்க முடியாத மாணவர்கள் எவரும் இல்லை ஆனால் படிப்பித்துக் கொடுக்க முடியாத ஆசிரியர்கள் இருக்கிறார்கள் - கிழக்கு மாகாண ஆளுனர் போராசிரியர் ஜெயந்தலால் ரெத்னசேகர.

SHARE

படிக்க முடியாத மாணவர்கள் எவரும் இல்லை ஆனால் படிப்பித்துக் கொடுக்க முடியாத ஆசிரியர்கள் இருக்கிறார்கள் - கிழக்கு மாகாண ஆளுனர் போராசிரியர் ஜெயந்தலால் ரெத்னசேகர.

படிக்க முடியாத மாணவர்கள் எவரும் இல்லை ஆனால் படிப்பித்துக் கொடுக்க முடியாத ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆசிரியர் என்பது ஒரு திறன். அது ஒரு கலை, அதுக்கு பயிற்சிகள் எடுக்க வேண்டும். என கிழக்கு மாகாண ஆளுனர் போராசிரியர் ஜெயந்தலால் ரெத்னசேகர தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட விவேகானந்தபுரம் பாமகள் வித்தியாலத்தில் புதிதாக நிருமானிக்கப்பட்ட 2 மாடிகளைக் கொண்ட பாடசாலைக் கட்டடத்தை திந்து வைக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (18.06.2026) பாடசாலை அதிபர் ஆர்.ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாடசாலைக் கட்டடத்தை திறந்து வைத்து விட்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் 

இப்பாடசாலையில் புதிதாக நிருமானிக்கப்பட்ட இரண்டு மாடி பாடசாலை கட்டிடத்தை திறந்து வைத்ததில் நான் சந்தோசம் அடைகின்றேன். இவ்வாறான கிராமங்களில் தற்போது பாடசாலை புதிய வகுப்பறை கட்டிடங்களை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அதுபோல் இந்த பாடசாலையிலும் 5 வகுப்பறைகளை கொண்ட இரண்டு மாடி புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு இப்போது திறந்து வைக்கப்பட்டிருக்கின்றதது. 

ஆனால் பாடசாலை கட்டிடங்கள் மாத்திரம் போதாது நாங்கள் பாடசாலையில் கற்கும் போது காலத்தில் இரண்டு மூன்று வருடங்களாக கட்டடங்கள் இல்லாமல் வெளியில் இருந்துதான் படித்தோம். அதற்கும் சுற்றாடல் கல்வி என ஒரு பதம் இருக்கிறது. ஆனால் இப்போது வெளியே போக முடியாது என பல குறைபாடுகள் சொல்லப்படுகின்றன. விளையாட்டுப் போட்டி நடந்தாலும் வெயில்தானே அதனால் வெளியில் செல்ல முடியாது என தெரிவிக்கின்றார்கள். அந்த திறன் இல்லாமல் உள்ளது. இப்போது பாடசாலை நடைமுறை கல்வியை தொடர்பில் நீண்ட காலமாக கதைக்கப்பட்டு வருகின்றன. இது அனைத்தும் கதை அளவில் மாத்திரம்தான். உண்மையிலேயே ஆசிரியர்கள்தான் வகுப்பறையில் இருந்து இதனை செவிக்க வேண்டும் கொள்கைகள் திட்டங்களை அனைத்தையும் திறம்பட எழுத முடியும் ஆனால் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் ஆசிரியர்கள்தான். 

படிக்க முடியாத மாணவர்கள் எவரும் இல்லை ஆனால் படிப்பித்துக் கொடுக்க முடியாத ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆசிரியர் என்பது ஒரு திறன். அது ஒரு கலை, அதுக்கு பயிற்சிகள் எடுக்க வேண்டும். அதிகம் ஆசிரியர்கள் தெரிவிப்பது அந்த வகுப்பறையில் எனக்கு படிப்பிக்க முடியாது இந்த வகுப்பறையில் எனக்கு படிப்பிக்க முடியாது, இந்தப் பாடம் எனக்கு படிப்பிக்க முடியாது என தெரிவிக்கின்றார்கள் ஆசிரியர் என்பது பயிற்சி எடுக்க வேண்டும் அது இலகுவில் அனைவருக்கும் வராது. 

ஆசிரியர் தொழில் என்பது என்பது ஒரு கலை, அது ஒரு  விஞ்ஞானம், அனைவருக்கும் இலகுவில் அது வராது. ஆசிரியர் தொழிலுக்கு விருப்பத்துடன் வரவேண்டும் ஆசிரியர் தொழிலுக்கு விருப்பம் இல்லாமல் வருபவர்களும் உள்ளார்கள். அவ்வாறு வருபவர்கள்தான் ஆசிரியர் தொழிலுக்கு வந்தவுடன் இடமாற்றம் கேட்கின்றார்கள். 

சிலர் வேறு தொழில் கிடைக்கவில்லை என்றால் ஆசிரியர் தொழிலுக்கு வருவார்கள். வேறு தொழில் கிடைக்கவில்லை என்பதற்காகத்தான் நான் ஆசிரியர் தொழிலுக்கு வந்திருக்கின்றேன். தெரிவிப்பார்கள். அவ்வாறு வரக்கூடாது. முதலாவது தெரிவாக ஆசிரியர் தொழில்தான் இருக்க வேண்டும். விருப்பமில்லாதவர்கள் ஆசிரியர் தொழிலுக்கு வந்து இரண்டு மாதங்களில் எங்களுக்கு இடமாற்றம் தாருங்கள் எனக்கு இருக்கின்றார்கள் என அவர் இதன்போது தெரிவித்தார். 

இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன், போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன், அதிபர்கள், ஆசிரியர்கள், தேசிய மக்கள் சக்தி கட்சியின் இணைப்பாளர்கள், மாணவர்கள், பெற்றோர் என பலரும் கலந்து கொண்டிருந கொண்டிருந்தனர்.













 




























SHARE

Author: verified_user

0 Comments: