19 Jun 2026

மகிளுரில் 08 அடி நீளமான ராட்சத முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு.

SHARE

மகிளுரில் 08 அடி நீளமான ராட்சத முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மகிளுர் கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் இன்று வெள்ளிக்கிழமை(19.06.2026) 08 அடி நீளமான ராட்சத முதலை உட்புகுந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் வெல்லாவெளியில் அமைந்துள்ள வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள காரியாலயத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். 

அப்பகுதிக்கு விரைந்து சென்ற வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உத்தியோகஸ்த்தர்கள், அப்பகுதி பொதுமக்களினதும் ஒத்துழைப்புடன், பல்வேறு பிரேயத்தனங்களுக்கு மத்தியில் முதலையை மடக்கி பிடித்துள்ளனர். 

பின்னர்  குறித்த முதலையை வனத்தில் விடுவதற்காக வாகனத்தில் பாதுகாப்பாக ஏற்றிச் சென்றனர்.








SHARE

Author: verified_user

0 Comments: