26 May 2026

இந்துக் கலா மன்ற அறநெறிப் பாடசாலையினால் திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை தினம் அனுஷ்டிப்பு

SHARE

இந்துக் கலா மன்ற அறநெறிப் பாடசாலையினால் திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை தினம் அனுஷ்டிப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் திருப்பழுகாமம் இந்துக் கலா மன்றத்தின் அறநெறிப் பாடசாலையினால் திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை தின நிகழ்வு இந்துக் கலாமன்ற அறநெறிப் பாடசாலையில் நடைபெற்றது. 

இதன்போது கூட்டுப் பிரார்த்தனை, திருநாவுக்கரசு சுவாமிகளின் அருள்பணிகள் மற்றும் ஆன்மீகப் பணிகள் தொடர்பான உரைகள், என்பன இடம்பெற்றதுடன், மாணவர்களினால் பல்வேறு கலை மற்றும் நிகழ்த்தப்பட்டன. 

இதன்போது போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் இந்துக் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ம.ரியகுமார், இந்துக் கலா மன்றத்தின் தலைவர் இ.திலக்ஷன், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.










 

SHARE

Author: verified_user

0 Comments: