27 May 2026

தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர் - மட்டக்களப்பில் சம்பவம்.

SHARE

தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர் - மட்டக்களப்பில் சம்பவம்.

இன்று புமன்கிழமை(27.05.2026) மாலை மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது அங்கு தங்கியிருந்த,  சந்தனி நிமாஷா (வயது 05) மற்றும் கசுன் மதுசங்க (வயது 03) என்ற இரண்டு குழந்தைகள், புகையை சுவாசித்ததன் காரணமாக உயிரிழந்தனர். 

பசறையிலிருந்து வந்து அக்குழந்தைகள் அவர்களது தந்தையுடன் குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளனர். மட்டக்களப்பில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தங்கள் தாயைப் பார்க்க வந்த நிலையிலேயே அவர்கள் அவ்விடுதியில் தங்கியிருந்துள்ளனர். 

தந்தை இரண்டு குழந்தைகளையும் தங்கியிருந்த  விடுதியின்  அறையில் பூட்டிவிட்டு, வெளியே சென்றுள்ளார். பின்னர் மீண்டும் விடுதிக்குத்  பார்த்த போது குழந்தைகள் தங்கியிருந்த அறையில் தீப்பிடித்துள்ளதை அவதானித்துள்ளார். பின்னர், இரண்டு குழந்தைகளும் அறையிலேயே மயங்கி விழுந்திருந்ததும் காணப்பட்டதும். பின்னர் குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர். 

பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் பொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் மற்றும் குற்ற தடுப்பு பொலிசார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். 

உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் உடல்களும் மட்டக்களப்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.











SHARE

Author: verified_user

0 Comments: