பெருங் குற்றவாளியைக் கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தர் ரமணனுக்கு ஜனாதிபதியிடமிருந்து உயரிய கௌரவம்.
அண்மையில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜனாதிபதி கலந்த கொண்ட நிகழ்வின்போதே இக்கௌரவம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது கந்தளாய் பிரதேசத்திற்கு உட்பட்ட வான்எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ரமணன் என்ற உத்தியோகத்தரே இவ்வாறு ஜனாதிபதியின் விசேட பாராட்டைப் பெற்றுள்ளார்.
களுவாஞ்சிகுடி பகுதியில் இடம்பெற்ற குறித்த பெரும் குற்றச்சம்பவத்தின் பின்னர், பொலிஸாரிடம் சிக்காமல் நீண்டகாலமாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளியை, திரு. ரமணன் தனது கடமை நேரத்தில் மிக நுணுக்கமாகவும் துணிச்சலாகவும் செயற்பட்டு இவர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் கைது செய்திருந்தனர்.
இவரது இந்த அர்ப்பணிப்புள்ள மற்றும் சாமர்த்தியமான சேவையைப் பாராட்டி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களிடதிருந்து விசேட வெகுமதியையும், சான்றிதளையும் பெற்றுக் கொண்டார்.
ஒரு சாதாரண பொலிஸ் உத்தியோகத்தரின் கடமை உணர்வு நாட்டின் உயரிய மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமையானது, ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தங்களது கடமைகளை செவ்வனே செய்ய பெரும் ஊக்கத்தை அளித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
.jpg)
.jpg)
0 Comments:
Post a Comment