20 Mar 2026

மட்டக்களப்பு மாந்தீவு ஆற்று பகுதியில் தரித்து நிற்கும் காட்டு யானைகள்.

SHARE

மட்டக்களப்பு  மாந்தீவு ஆற்று பகுதியில் தரித்து நிற்கும்  காட்டு யானைகள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மாந்தீவு பகுதியில் உள்ள சதுப்பு நிலப்பரப்பிற்குள் வியாழக்கிழமை(19.03.226) இரண்டு  காட்டு யானைகள் சஞ்சரிப்பதை பிரதேசிவாசிகள் அவதானித்து வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினருக்குத் தெரிவித்துள்ளனர். அப்பகுதிக்கு விரைந்த வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினர், இராணுவத்தினர் மாந்தீவில் நிலை  கொண்டுள்ள  காட்டு யானைகளை  களத்தில் நின்று  காட்டு யானைகளை துரத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்தக் காட்டுயானைகள் வவுணதீவு, ஆயித்தியமலை பிரதேசம் முழுவதும் உணவுதேடி  சுற்றித்திரிந்து பொது மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

தற்பொழுது யானை மனித மோதலை தொடர்ந்து மாந்தீவு நிலப்பரப்பிற்குள் சஞ்சரித்த காட்டு யானை கூட்டத்தை  அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தும்  முயற்சியை மேற்கொண்டிருந்த போதும்  யானைக் கூட்டம் மாந்தீவு பகுதியில் தொடர்ந்தும் நிலை கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமம் முதல் நகர் பகுதி வரைக்கும் தற்போது காட்டு யானைகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




 

SHARE

Author: verified_user

0 Comments: