மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின்
சடலம் மீட்பு, அதே கிணற்றிலிருந்து குற்றுயிராய் மற்றுமொரு பெண் உயிருடன் மீட்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்காரைப் பிரதேசத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை நெல்லிக்காடு பகுதியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதோடு, அதே கிணற்றிலிலிருந்து உயிருடன் மேலும் பெண்ணும் மீட்கப்பட்டள்ளார்.
அப்பகுதியைச்; சேர்ந்த தாய் ஒருவர் அவருது
பிள்ளையுடன் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு வியாழக்கிழமை(19.03.2026) சென்றவர்
வெள்ளிக்கிழமை காலை வரைக்கும் வீடு திபியிருக்கவில்லை.
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை(20.03.2026) காலையில் சிறிய பிள்ளை ஒன்று அப்பகுதியிலுள்ள வயற் பகுதியில் அழுது கொண்டு இருந்த நிலையில் வழியால் சென்றவர்களல் அப்பிள்ளை மீட்கப்பட்டுள்ளது.
அப்பிள்ளையின் தாயை கண்டுபிடிக்காத நிலையில் அப்பகுதியில் அமைந்துள்ள வயல்வெளியில் அமைந்திருந்த பாழ்ங் கிணற்றில் இருந்து குற்றுயிராய் அத்தாய் தாய் உயிருடன் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த தாய் அணிந்திருந்த தாயின் தாலிக்கொடி களவாளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இது இவ்வாறு இருக்க அதே பாழ்ங் கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் இன்னும் சில மனித உடலங்கள் உள்ளதாக அந்த தாய் கூறியதற்கிணங்க அக்கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 28.02.2025 அன்று பழுகாமம் கிராமத்திலிருந்து காணாமப்போன நாற்பதாம் கிராமத்தைச் சேர்ந்த 45 வயது பெண்ணினுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த சடலம் உருக்குலைந்திருபதனால் அடையாளம் காணமுடியாதுள்ளதாகவும், அப்பெண் அணிந்திருந்ததாகக் கருதப்படும் செருப்பு, ஆடைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. இவ்விடையம் தொடர்பில் கொக்கட்டிச்சாலை பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
.jpg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment