சர்வதே வெள்ளைப் பிரம்பு
தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற விழிப்புணர்வு பேரணி.
இந்நிகழ்வில் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் மாவட்ட ஆளுநர் லயன் சகீர் அஹமட் பிரதம
விருந்தினராகவும், சர்வதேச லயன்ஸ் கழகத்தின் மாவட்ட முன்னாள்
ஆளுநர் லயன் கே.லோகேந்திரன், சர்வதேச லயன்ஸ் கழகத்தின் முதன்மை திட்ட இணைப்பாளர்
பேரின்பராஜா சடாட்சரராஜா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.
மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் ப.சுபராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின், ஆரம்பத்தில் கல்லடி பாலத்திலிருந்து ஆரம்பமான விழிப்புணர்வுப் பேரணி சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்களின் பாண்டு வாத்தியத்துடன், தரிசனம் விழிப்புலனற்றோர் சங்கம் வரைச் சென்று பின்னர் கல்லடி துளசி மண்டபத்தை வந்தடைந்தது.
இதன்போது ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சர்வதேச வெள்ளை
பிரம்பு தினத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய வண்ணம்
இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment