22 Oct 2026

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாணவர்களிடையே நடைபெற்ற வினாடி வினா போட்டி.

SHARE

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாணவர்களிடையே நடைபெற்ற வினாடி வினா போட்டி.

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பொது நூலகமும், குருமண்வெளி பொது நூலகமும் இணைந்து ஏற்பாடு செய்த வினாடி வினா போட்டி வியாழக்கிழமை(22.010.2026) களுவாஞ்சிகுடி பொது நூலகத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் மட்/பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை மற்றும் மட்/பட்/குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலய மாணவர்கள் கலந்து கொண்டதோடு இறுதியில் இப்போட்டியில் குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலய மாணவர்கள் வெற்றி பெற்றனர். 

இந்த நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை சிரேஸ்ட முகாமைத்துவ உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: