துவிச்சக்கர வண்டியில் இலங்கையின் கரையோரத்தைச் சுற்றிவலம் வரும் முதியோரை
வரவேற்கும் நிகழ்வு.
இலங்கையின் கரையோர பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் 31 நாட்களை இலக்காகக் கொண்டு துவிச்சக்கர வண்டிப் பயணத்தை மேற்கொண்டு வரும் முதியோர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்டம் முண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதரின் வழிகாட்டலில், நிருவாக உத்தியோகத்தர் கே.கருணாநிதியின் தலைமையில், முதியோர் அபிவிருத்தி உத்தியோகத்தர் வே.பத்மினியின் ஒழுங்குபடுத்தலில் புதன்கிழமை மாலை(21.10.2026) பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
தேசிய முதியோர் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வுப்
பேரணியானது, இலங்கையில்
முதியவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும், அவர்கள் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், நோக்கமாகக்
கொண்டு இந்த கரையோர பவனி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
முதியோர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாகப் பெற்றுக்கொள்ளவும் அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள '1890' என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை பொதுமக்களிடையே கொண்டு சேர்ப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.
இந்நிகழ்வில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.புவிதரன், சமூக
அபிவிருத்தி உத்தியோகத்தர் தெ.உதயசுதன்,
அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலத்திற்கு உட்பட்ட முதியோர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து
கொண்டிருந்தனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment