செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலய கொடியேற்றம்.
மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றம் சனிக்கிழமை (21.03.2026) பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ, அரோகரா கோசங்கள் முழங்க பக்தி பூர்வமாக நடைபெற்றது.
ஆலயத்தில் நடைபெற்ற விநாயகர் வழிபாட்டை தொடர்ந்து , செட்டிபாளையம் சிவன் ஆலயத்தில் இருந்து சம்பிரதாய பூர்வமாக கொடிச்சீலை எடுத்து வரப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றதை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் விநாயகப்பெருமான், எழுந்தருளி உள் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவம் பெருவிழா தொடர்ந்து பதினொரு நாட்கள் நடைபெற்று எதிர்வரும் 31 ஆம் திகதி தேரோட்டப்பெருவிழாவும், முதலாம்; திகதி பங்குனி உத்திர தினத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆலய கிரியை நிகழ்வுகள் யாவும் ஆலய மகோற்சவ
கால பிரதம குரு சிவ ஸ்ரீ அருளானந்தம் குருக்கள் தலைமையிலான குருமாரால் நடாத்தப்படுகின்றமை
குறிப்பிடத்தக்கது.







0 Comments:
Post a Comment