21 Jan 2026

தீர்க்கப்படாத மயிலத்தமடு மேச்சல்தரை பிரச்சினைக்கு மத்தியில் பட்டிப்பொங்கல்.

SHARE

தீர்க்கப்படாத மயிலத்தமடு மேச்சல்தரை பிரச்சினைக்கு மத்தியில் பட்டிப்பொங்கல்.

மயித்தமடு மற்றும் மாதவணை கால்நடைப் பண்ணையாளர்களின் பட்டிப்பொங்கல் 856 வது நாளாக போரடியும் கிடைக்கத்த நிலையில் 2026.01.19 அன்று மயிலத்தமடு மேச்சல்தரை பகுதியில் அதன் தலைவர் சீனித்தம்பி தியாகராசா (நிமலன்) தலையில் பட்டிப்பொங்கல் பூசை நடைபெற்றது.  

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து கால்நடைகளுக்கான மேச்சல் தரைகோரிய மயிலத்தமடு மற்றும் மாதவணை கால்நடை பண்ணையாளர்களின் பகலிரவு போராட்டமானது மட்டக்களப்பு சித்தாண்டி பிரதான வீதிக்கருகில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. மட்டக்களப்பு  மாவட்டத்திலே அதிக நாட்கள் கடந்தும் அரசியல்சாராத ஒரு மக்களின் வாழ்வியல் பொருளாதார மற்றும் நில அவகரிப்பு, நில மீட்பு, நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்டவற்றை பிரதானமாக கொண்ட போராட்டமாக 856 வது நாட்களை கடந்து செல்கின்ற நிலையிலே தங்களுக்கு இதுவரைக்கும் எவ்விதமான தீர்;வும் எட்டப்படாத நிலையில் பட்டிப்பொங்கலை பண்ணையாளர்கள் செய்து கொண்டனர்.

தங்களின் மேச்சல்தரை பிரச்சினை உள்ளிட்ட கால்நடை மற்றும் பண்ணையாளர்களுக்கான முடிவு அந்தா? கிடைக்கும் இந்த கிடைக்கும் என்கின்ற எதிர்பார்ப்புடன் போராடிவருகின்ற நிலையில் வழமைபோன்று தங்களின் போராட்டத்திற்கு அன்றிலிருந்து இன்றுவரை பண்ணையாளர்களின் போராட்டத்தை அரசியல் தலைமைகளுக்கு அரசியல் ஊடாக கொண்டுசேர்க்கும் மட்டக்களப்பு மாவட்;டத்திலுள்ள அரசியல்வாதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய பட்டிப்பொங்கல் நிகழ்வுக்கு இலங்கை தமிழ் அரசு கட்சி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் வெலிக்கந்தை மகாவெலி திட்ட முகாமையளர் உள்ளிட்ட செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட பண்ணையாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். 

குறித்த கால்நடைகளுக்கான போதிய மேச்சல்தரை வழங்கப்படாமையின் பிரதிபலிப்பாக குறித்த பகுதிளில் தொடர்ச்சியாக இலட்சக்காணக்கான பெருமதியுடைய கால்நடைகள் இறந்துகொண்டு வருகின்றதை அவதானிக்கமுடிகின்றது.

மயிலத்தமடு மற்றும் மாதவணை கால்நடை பண்ணையாளர்களின் கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மேச்சல்தரை ஒதுக்குதல், கால்நடைகளுக்குரிய குடிநீர் வசதிகள், போக்குவரத்து வீதி கட்டமைப்பு, புல்தரைகளை உருவாக்குதல், குளங்களை புனரமைத்தல், பண்ணையாளர்களின் வாழ்வியல் பொருளதார முன்னேற்றத்திற்கு ஏற்றால்போல் அடிப்படை வசதிகளை அமைத்துக்கொடுத்தல் உள்ளிட்ட பல விடயதானங்கள் சட்டரீதியாக கிடைக்கும்வரை தொடர்ச்சியாக போராட்டம் இடம்பெறும் என பண்ணையாளர்கள் உறுதியான நிலைப்பாட்டடில் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
















SHARE

Author: verified_user

0 Comments: