மட்டக்களப்பு ஆரையம்பதியில் கடற்கரை பொழுதுபோக்கு
பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 ஆயிரம் மில்லியனுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடுகளில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றன என பராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உள்ளுர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பிரயாணிகளின் வருகைக்காக க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஊடாக கரையோர கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றன. இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலமையில் ஆரையம்பதி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை(01.10.2025) அடிக்கல் நாட்டிவைக்கும் நிகழ்வு பெற்றது.
மண்முனைப்பற்று உதவிப் பிரதேசெயலாளர்
பார்த்தீபன், நட்புக்கு உயிர்கொடுப்போம் எனும் அமைப்பின் ரா.யோகேஷ்குமார், மண்முனைப்பற்று பிரதேசசபையின் உதவித்தவிசாளர் மற்றும்,
பிரதேசசபையின் செயலாளர் மற்றும் பிரதேசசபையின் உறுப்பினர்கள், கிராம உத்தியோகஸ்தர்,
பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாடளாவிய ரீதியில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றன. அதுபோல் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக தற்போது நாங்கள் 9 ஆயிரம் மில்லியனுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடுகளில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றன. மக்களின் நீண்டகாலத் தேவையாகக் கருதுகின்ற வேலைத்திட்டங்களுக்கே நாம் அதிகளவு நிதியை ஒதுக்கீடு செய்திருக்கின்றோம். அதுபோல் வருகின்ற வருடத்திலும் பல வேலைத்திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு நாங்கள் தயார்படுத்தல்களை மேற்கொண்டிருக்கின்றோம். என இதன்போது தேசிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment