7 Sept 2025

கிளீயின் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் முழுமையாக இந்த நாட்டில் இருந்து போதை வஸ்து ஒழிக்கப்பட வேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்

SHARE

கிளீயின் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் முழுமையாக இந்த நாட்டில் இருந்து போதை வஸ்து ஒழிக்கப்பட வேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்.

தற்போது வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக இந்தோனேசியாவில் இருந்து 5 போதைவஸ்து வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றார்கள் அதனைத் தொடர்ந்து நுவரேலியாவில் மெத்தெனிய மற்றும் தங்காலை போன்ற இடங்களில் போதைப் பொருட்கள் தயாரிப்பதற்கான இரசாயனங்கள் நிலத்தடியில் இருந்து பெறப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 50,000 கிலோ கிராம் எடையுள்ள போதைப்பொருள் உற்பத்தி செய்யக்கூடிய இரசாயனங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. உண்மையில் கிளியின் ஸ்ரீலங்கா எனும் திட்டத்தின் கீழ் இவ்வாறு போதைப்பொருட்களுக்குரிய மூலப் பொருட்கள் அல்லது இரசாயனங்கள் கைப்பற்றுவதென்பது நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் இந்த அளவிற்கு அதிகமான போதைப் பொருட்கள் இலங்கைக்குள் வந்திருக்கின்றது என்றால் நிச்சயமாக போதைப்பொருள் வியாபாரிகளோ அல்லது முக்கியஸ்தர்களாலோ, இது முடிந்திருக்காது. இதற்குப் பின்னால் பலமான அரசியல் சக்திகள் இருந்திருக்கின்றன அதற்கு துணையாக பொலிஸ் சக்திகளும் இருந்திருக்க வேண்டும். 

என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை(07.09.2025) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவிதத்தார். இதன்போது  அவர் மேலும் தெரிவிக்கையில். 

போதைப் பொருள் வியாபாரிகள் நேரடியாகவே இந்த விடயத்தில் ஈடுபடுத்துந்தவர்கள் இவர்களுக்கு பின்னாலிருந்து செயற்படுகின்றவர்கள் காணப்படுகின்றார்கள். அரசியல் சக்திகள் அல்லது காவல்துறை சக்திகளும் உள்ளனர் அவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும். ஏனெனில் எய்தவர்கள் இருக்க அம்புகள் மாத்திரம்தான் மாட்டிக் கொள்ளும் காலமாக இருக்கின்றன கர்த்தாக்கள் பிடிபடாமல் கருவிகள் பிடிபட்டுக் கொண்டிருக்கின்றன. 

எனவே கிளீயின் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் முழுமையாக இந்த நாட்டில் இருந்து போதை வஸ்து ஒழிக்கப்பட வேண்டும். வெளிநாடுளிலிருந்துதான் போதைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுவதாக இதுவரைக்கும் நினைத்திருந்தார்கள். ஆனால் தற்போது கிடைத்திருக்கின்ற தகவல்களின்படி மெத்தெனிய போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பிரமாண்டமான அளவுக்கு அதிகமான போதைவஸ்து பொருட்களை பார்க்கின்ற போது அங்கு ஒரு தொழிற்சாலையே இயங்கி வந்திருப்பதாக அப்பகுதியில் கூறப்படுகின்றன. சட்ட விரோதமான போதைப் பொருள் தொழிற்சாலை இலங்கையில் இயங்கி வருகின்றது என்றால் அதற்கு நிச்சயமாக அதனை பாதுகாப்பதற்குரிய பெரிய அரசியல் சக்திகள் இருந்திருக்க வேண்டும். காவல்துறை சக்திகளும் இருந்திருக்க வேண்டும். 

கைது செய்யப்பட்டவர்களை முறையாக விசாரிக்கப்படுகின்ற போது அவர்களுடைய இயக்குனர்கள் யார் பணிப்பாளர்கள் யார் இதனை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு எப்படியான மர்மமான திட்டங்கள் கையாளப்பட்டிருந்தன என்ற உண்மைகளை கண்டறிய முடியும். 

நாடு சீரழிவதற்கும் சமூகங்கள் சீரழிப்பதுக்கும் குறிப்பாக வடக்கு கிழக்கில் பலவிதமான போதைப் பொருள் பாவனைகள் யுத்தத்தின் பின்னர் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன. கைது செய்யப்பட்டிக்கின்ற ஒருவர் ஒரு ஜிபில் கேரளா கஞ்சாவுடன் பிடிபட்டிருக்கின்றார் பின்னர் அவர் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு இருக்கின்றார். இப்போது மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். எனவே பொதுவாக நோக்குகின்ற போது போதைப் பொருளால் நாட்டையும் மக்களையும் குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் பேசுகின்ற மக்களையும் சீரழிக்கின்ற கலாசார படுகொலை செய்கின்ற இனப்படுகொலையின் ஒரு வடிவமாகதான் இதுவும் இருக்கின்றன. கட்டுக்கோப்பான கலாசார விழுமியங்களை அழித்து விட்டால் அங்கு ரவுடித்தனமான பிற்போக்கான சமூக சீரழிவுக்கான செயற்பாடுகளை ஊக்கிவிக்க முடியும். யுத்தம் நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் வடகிழக்கில் இவ்வாறு நாசகார வேலைகள் நடைபெறவில்லை இப்போது இந்த நாசக்கார வேலைகளை செய்யும் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க வேண்டும் முக்கியமான சூத்திரதாரிகளை வைத்து விட்டு அவர்களுடைய கருவிகளை பிடிப்பதான் மூலமாக இந்த போதை வஸ்து விநியோகத்தை வியாபாரத்தை துஷ்பிரயோக நடவடிக்கையை கட்டுப்படுத்த முடியாது. 

எனவேதான் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் போதை வஸ்து என்பது நாட்டிலிருந்து துடைத்தறியப்பட வேண்டும் இதன் சூத்திரதாரிகளாக இருக்கின்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். விக்கி முக்கியமான பெரிய முதலாளிகளை விட்டுவிட்டு அவர்களுடைய ஏவலாளிகளை மாத்திரம் கைது செய்வதென்பது என்பது போதை பொருளை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது எனவே உண்மைகள் பகிரமாகம் ஆக்கப்பட வேண்டும் பெரும்புள்ளிகளாக இருக்கின்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும். 

பலே சுதா கைது செய்யப்பட்டபோது ஒரு உண்மையைச் செய்து சொல்லி இருந்தார் தான் ஒரு அரசியல் சக்திக்கு மாதம் 60 லட்சம் தொடக்கம் ஒரு கோடி ரூபாய் வரைக்கும் கப்பம் கொடுத்ததாக தெரிவித்திருந்தார். அந்த அரசியல் சக்தி பின்னர் ஒரு படுகொலையின் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை பின்னர் கோதபாய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக வந்த போது  பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் படுகொலை செய்த அந்த அரசியல் சக்தியை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்திருந்தார். 

இவ்வாறான செயற்பாடுகளை பார்க்கின்றபோது போதை வஸ்து பாவனைகளுக்கும் விநியோகத்துக்கும் உடந்தையாக இருக்கின்றவர்களை காப்பாற்றுகின்ற செயற்பாடுகள்கூட நடந்திருக்கின்றன. எனவே போதை வஸ்து இலங்கையில் இருந்து முற்றாக கழுவி எடுக்கப்பட வேண்டுமாக இருந்தால் துடைத்தறியப்பட வேண்டுமாக இருந்தால், பின்புலத்தில் இருக்கின்ற இயக்குனர்கள் கைது செய்யப்பட வேண்டும். 

கடந்த காலத்தில் இந்த போதை வஸ்து வியாபாரிகளோடு அல்லது போதை வஸ்து முக்கியஸ்தர்களோடு, அரசியல்வாதிகள் பின்னிப்பிணைந்து இருந்து பாதுகாத்து இருக்கின்றார்கள். எனக்கும் தெரியும் ஒரு தடவை கூறப்பட்டிருந்தது நீர் கொழும்பில் ஒரு முக்கியமான அரசியல் சக்தி இந்த போதை வஸ்து சம்பந்தமாக கைது செய்யப்படக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி சுற்றி வளைப்பு செய்த போது அக்கால ஜனாதிபதி உலங்கு வானூர்தியில் சென்று அந்த அரசியல்வாதியை காப்பாற்றியதாக அக்காலத்தில் கதைகள் வெளிவந்திருந்தன.

இந்த போதை வஸ்து வியாபாரம் என்பது பாதாள உலக குழுக்களுக்கு மாத்திரம் இல்லாமல் பளிச்சிடும் வெள்ளைகளோடு, பளிச்சிடும் சிரிப்புகளோடு, மக்களை ஏமாற்றி திரிகின்ற நாட்டின் தலைமைகளாக இருந்தவர்கள், முக்கிய அமைச்சர்களாக இருந்தவர்களும்கூட இதில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்பதை சில இணையதளங்களை பார்க்கின்ற போது தெரிவிக்கப்படுகின்றன. 

கடந்த காலங்களில் இந்த ஜனாதிபதி அவர்களுடைய மகன் போன்றவர்களும் இதனோடு சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள். அதேபோன்று கம்பஹா மாவட்டத்தில் ஒரு முக்கியமான ஒரு அரசியல் சக்தியாக இருக்கின்றவரும் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்; வந்திருக்கிறது. இந்த விடயங்களை மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக வெட்ட வெளிச்சமாக கொண்டு வருவதன் மூலமாகதான் இந்த நாட்டை நாட்டின் தலைவர்களாக நாட்டின் காவல் சக்திகளாக அல்லது நாட்டை காக்கின்ற தேச பக்தர்களாக காட்டிக் கொள்கின்ற இந்த முகமூடிகளை கிழித்தெறிந்து நாட்டை நாசகார வேலைகளுக்கு கொண்டு இயக்குகின்ற பிரமுகர்கள் பிரதிநிதிகள் அரசியல் தலைவர்கள் அரசியல் சக்திகள் காவல் சக்திகள் எவை என்பதை மக்களுக்கு புடம் போட்டு காட்ட முடியும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

 









SHARE

Author: verified_user

0 Comments: