6 Sept 2025

இலங்கைக்கான சீன துதுவர் மட்டக்களப்புக்கு விஜயம் உலர் உணவு மற்றும் வாழ்வாதார உபகரணங்கள் மற்றும் உணவு வழங்கி வைப்பு.

SHARE

இலங்கைக்கான சீன துதுவர் மட்டக்களப்புக்கு விஜயம்  உலர் உணவு மற்றும் வாழ்வாதார உபகரணங்கள் மற்றும் உணவு வழங்கி வைப்பு.

சீன அரசினால் மட்டக்களப்பு மாவட்டத்தில்  மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உபகரணங்கள்   மற்றும்  உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் சனிக்கிழமை(06.08.2025) வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர்  கிசென்கொங் (Qi Zhenhong)  மட்டக்களப்பு மாவட்டத்தில்  வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு “சீனாவின் சகோதர பாசம் எனும் தொனிப் பொருளின் கீழ் உலர் உணவு பொதிகளை வழங்கி வைக்கப்பட்டன. 

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு இதன்போது உலர் உணவு பொதிகளும், வாழ்வாதார மேம்பாட்டிற்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 07 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள மக்களின்  வாழ்வாதாரத்தை மேம்படுத்தி நிலையான வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கான உபகரணங்களே சீன இலங்கை சகோதர பாசம் எனும் திட்டத்தின்கீழ் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன. 

இதன் போது கருத்து தெரிவித்த இலங்கைக்கான சீன தூதுவர் சீன அரசானது எப்போது இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதுடன் கடந்த பொருளாதார தலம்பல் காலங்களில் இலங்கைக்கு நண்பனாக உதவியமையும் இதன் போது சுட்டிக்காட்டினார். 

இந் நிகழ்வில் சீனத் தூதுவரின் பாரியார் திருமதி ஜின் குவான், தூதரக அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள் ,மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினர் மற்றும் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.




























SHARE

Author: verified_user

0 Comments: