அரசாங்கத்தைப்
பாதுகாக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபு (PSTA) தொடர்பில்
மட்டக்களப்பில் நடைபெற்ற கலந்துரையாடல்.
ஆரசாங்கத்தினால்
தற்போது புதிதாக முன்மொழியப்பட்டுள்ள அரசாங்கத்தைப் பயங்கரவாதத்திலிருந்து
பாதுகாக்கும் சட்ட வரைபு (PSTA) தொடர்பில் ஊடகவியலாளர்கள், அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு
நிறுவனங்களின் பிரதிநிதிகள், மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களைத்
தெழிவு படுத்தும் கலந்துரையாடல் ஒன்று புதன்கிழமை(25.02.2026) விழுது நிறுவனத்தின் ஒத்துழைபபுடன் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டி அதன்
தலைவர் வடிவேல் சக்திவேல் தலைமையில் மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்றது.
புதிதாக முன்மொழியப்பட்டுள்ள அரசாங்கத்தைப் பாதுகாக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபு (PSTA) பற்றியும் இது சட்டமாக நிறைவேற்றப்பட்டால் அதன் தாக்கம் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
சிரேஸ்ட ஊடகவியலாளர் இலட்சுமணன் தேவஅதிரன், விழுது ஆற்றல் மேம்பாட்டு திட்ட இணைப்பாளர் போன்றோர் இங்கு கருத்து தெரிவித்தனர்.
இதன்போர் கலந்துகொண்ட
தந்த சமூக செயற்பாட்டாளார்கள் அரசாங்கத்தால் தற்போது புதிதாக முன்மொழியப்பட்டுள்ள
அரசாங்கத்தைப் பாதுகாக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபு (PSTA) தொடர்பிலும், தற்போது
நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதச் சட்டம் (PTA) தொடர்பிலும் தமது
கருத்துக்களைத் தெரிவித்தனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment