27 Feb 2026

முனைக்காடு கிராமத்திற்குள் அதிகாலையில் புகுந்த யானையின் தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்.

SHARE

முனைக்காடு கிராமத்திற்குள் அதிகாலையில் புகுந்த யானையின் தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்.

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்திற்குள் இன்று வெள்ளிக்கிழமை(27.02.2026) அதிகாலை உட்புக்குந்த காட்டு யானை ஒன்று மக்கள் குடியுருப்பு பிரதேசத்துக்குள் பிரவேசித்து அட்டகாசம் புரிந்துள்ளது.

அதிகாலை வேளையில் புகுந்த யானை வீட்டில் தங்களது வீட்டு வேலைகளை கொண்டிருந்த பெண்களை எதிர்கொண்டு தாக்கியுள்ளது. காட்டு யானை தாக்குதலில் 75 வயது மதிக்கதக்க அக்கராமத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெரு நிலப்பரப்பின் எல்லைக் கிராமங்களில இதுவரைகாலமாக அட்டகாசம் செலுத்தி வரும் காட்டுயானைகள் தற்போத மட்டக்களப்பு நகர் பகுதி உள்ளிட்ட கரையோரப் பகுதிகயையும் தாக்கி வருகின்றது. 

எனவே ஒட்டு மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தை ஆட்டிப்படைக்கும் காட்டுயானைகளின் தொல்லைகளுக்கு முடிவு காணுமாறு மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.






SHARE

Author: verified_user

0 Comments: