31 Aug 2025

பெரியகல்லாறு புனித அருளானந்தர் வித்தியாலயத்தின் பவள விழா நடைபவனி.

SHARE

பெரியகல்லாறு புனித அருளானந்தர் வித்தியாலயத்தின் பவள விழா நடைபவனி.மட்டக்களப்பு மாவட்டம் பெரியகல்லாறு புனித அருளானந்தர் வித்தியாலயத்தின் எழுபத்தைந்தாவது நிறைவை முன்னிட்டு  பவள விழா நடைபவனி சனிக்கிழமை(30.08.2025) மிகவும் சிறப்பாக நடை பெற்றது.

பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பமான குறித்த நடைபவனி, பெரியகல்லாறு கிராமத்தை சுற்றி வலம் வந்து பாடசாலை மீண்டும் முன்றலில் வந்து முடிவடைந்தது. 

குறித்த பாடசாலை ஆரம்ப பிரிவு பாடசாலையாக இருக்கின்றபோதிலும், ஊர்வலத்தில் பல்வேறு காலகட்டங்களில் கல்வி கற்ற பழைய மாணவர்கள்  ஆர்வத்துடன் வயது மற்றும் பதவி, வித்தியாசமின்றி கலந்து கொண்டிருந்தனர். 

இந்த பவள விழாவைச் மிகவும் சிறப்பாக நாடாத்துவற்கான சுமார் ஏழு இலட்சம் ரூபாய் நிதி அனுசரணையை பாடசாலை அபிவிருத்திச் சங்கம், மற்றும் பழைய மாணவர் சங்கத்தினரின் வேண்டுகேளிற்கு இணங்க அவுஸ்ரேலியாவில் பும்பெயர்ந்து வாழும் “தடம் எனும் அமைப்பின் தலைவர் இ.நிரஞ்சன் வழங்கியிருந்தனர். 

மேற்படி பவள விழாவை நடாத்துவதனூடாக பாடசாலையின்பாற் கல்விச் சமூகத்தின் ஈடுபாடு கூடியுள்ளதாகவும், இதன் காரணமாக  எதிர்காலத்தில் பாடசாலையின் அனைத்து விடயங்களிலும் கட்டியெழுப்புவதற்கு இப்பவளவிழா நிகழ்வு கால்கோளாக அமைந்துள்ளதாகவும், கல்வி சமூகத்தினர் தெரிவித்ததுடன், இதற்கான நிதியுதவியினை வாரி வழங்கிய “தடம் எனனும் தன்னார்வ அமைப்பின் தலைவர் நிரஞ்சன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்வதாக கல்விச் சமூகத்தினர் இதன்போது கருத்து தெரிவித்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: