15 Mar 2025

வரவு செலவுத் திட்டத்திலேயே கிழக்கு மாகாணத்திற்கென பாரிய நிதி ஒதுக்கீடுகள் எதுவும் இல்லை – சிறிநாத் எம்.பி

SHARE

வரவு செலவுத் திட்டத்திலேயே கிழக்கு மாகாணத்திற்கென பாரிய நிதி ஒதுக்கீடுகள் எதுவும் இல்லை – சிறிநாத் எம்.பி.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்ற இந்த நிலையில் சமகாலத்தில் என்ன நடைபெறுகின்றது என்பதை நாங்கள் சற்று ஆராய வேண்டியுள்ளது. கடந்த பொது தேர்தலில் பொதுவாக மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு தெரிவிதிருந்த வேளையிலே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்கி இருந்தார்கள். கடந்த மூன்று நான்கு மாதங்களில் அரசாங்கம் எவ்வாறு போய்க்கொண்டிருக்கின்றது என்பதை தொடரில் தமிழ் மக்கள் சற்று கூர்ந்து ஆராய வேண்டிய நிலைமை இருக்கின்றது.

வரவு செலவுத் திட்டத்திலேயே கிழக்கு மாகாணத்திற்கென பாரிய நிதி ஒதுக்கீடுகள் எதுவும் இல்லை. மட்டக்களப்பு மாவட்டத்திலே கடந்த காலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட் தொடர்ச்சியான நிதி ஒதுக்கீடுகளை விட குறிப்பிடப்பட்ட அளவிலேயே எந்த விதமான நிதி ஒதுக்கீடுகளும் குறிப்பாக விசேட வேலைத்திட்டங்களில்கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 

என இல்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார். புதன்கிழமை(12.03.2025) மாலை மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது காரியலயல்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பி;டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்.

 இந்த அரசாங்கத்திலே நாங்கள் நம்பிக்கை வைத்து பாராளுமன்றத்திலே பல விடயங்களை நாங்கள் முன்வைத்திருந்தோம் குறிப்பாக கித்தூள் றூகம் குளங்களின் இணைப்பு முந்தனையாறு செயற்றிட்டத்தினை மிக விரைவாக முன்னெடுப்பதற்காக நாங்கள் இந்த வரவு செலவுத் திட்டத்திலேயே நிதி ஒதுக்கிடும்படி பலமுறை கூறியிருந்தோம். அதனோடு இணைந்து மிகப் பெரிய அளவிலான நிலப்பரப்பை இணைக்கின்றான் பாலத்தின் அபிவிருத்தி மற்றும் படுவான்கரைக்கும் எழுவாங்கரைக்கும் இடையிலான பாலங்களின் அபிவிருத்தி புனர்நிர்மாணம் உட்கட்டமைப்பு போன்ற பல செயற்திட்டங்களை நாங்கள் அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தோம் ஆனால் அவற்றுக்கான எந்த உறுதிப்பாடுகளும், நிதி ஒதுக்கீடுகளும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 

அரசியல் தீர்வு தொடர்பாகத்தான் இந்த அரசாங்கம் பாரிய இழுத்தடிப்புகளை செய்து கொண்டிருக்கின்றது என்று இருந்தாலும்கூட அதற்கு அப்பால் பொருளாதார விடையத்திலும் நிதி அதிகாரங்கள் விடயத்திலும்கூட பாரியளவு அல்லது வடகிழக்கு பிரதேசங்களில் பாரியளவு அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணப்பாடு  உண்மையாகவே இருப்பதாக தெரியவில்லை,

 30 வருடங்களுக்குப் பின்பு அந்த கலந்து காலங்களிலே அபிவிருத்தி செய்யப்படாத வடகிழக்கு பிரதேசம் பின்பு யுத்தத்துக்கு பின்னரும்கூட பாரியளவு ஓரம் கட்டப்பட்டிருந்தன. புதிய அரசாங்கம் வந்த பின்னர் அவைகள் அனைத்தும் மாறும் என்ற அடிப்படையில் தமிழ் மக்களும் கூட சில இடங்களில் அவர்களுக்கு ஆதரவுகளை வழங்கியிருந்தார்கள். 

இந்நிலையிலும் அதே பாராமுகமும், ஒதுக்கப்படுகின்ற நிலையும், சூழலும்தான் இன்னும் வடகிழக்கிலே இருந்து கொண்டிருக்கின்றன. முக்கியமாக எமது நிலம் தொடர்பான பிரச்சனைகள், நிலாக்கிரமிப்பு, மத்திய அரசுக்கு கீழ் இருக்கின்ற திணைக்களங்கள் திணைக்கலங்களால் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள், ஒடுக்கு முறைகள், என்பன தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இன்னும் எங்களுடைய மேய்ச்சல்தரை தொடர்பான பிரச்சனை தொடர்பில் உறுதியான நிலைப்பாடு எட்டப்பட்ட வில்லை இது தொடர்பாக பாராளுமன்றத்திலும் குழு கூட்டங்களிலும் நாங்கள் பலமுறை எடுத்தியம்பிருக்கின்றோம். 

இவற்றுக்கு அப்பால் மத்திய அரசின் கீழ் இருக்கின்ற வன இலாகா திணைக்களம் மக்களின் சேனைப் பயிற் செய்கைகளுக்குள் புகுந்து அடாவடித்தனமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களின் குடிசைகளை எதிர்த்து உணவுப்பொருட்களையும் கைப்பற்றிச் சென்றுள்ளார்கள். இந்த அடக்குமுறைகளைகூட கட்டுப்படுத்தி அதற்குரிய விசாரணைகளை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகூட முன்னெடுக்கப்படவில்லை. இவ்வாறான பல செயற்பாடுகளை நாங்கள் பார்க்கின்ற பொழுது கடந்த காலங்களில் கடந்து வந்த மற்ற அரசாங்கங்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு உறுதுணை இல்லாமல் நடந்து கொண்டார்களோ அதே போன்றுதான் இந்த புதிய அரசாங்கமும் நடந்து கொள்கின்ற தோற்றப்பாடு காணப்படுகின்றது. அது மாத்திரமின்றி பல விடயங்களிலும்கூட பாகுபாடான நிலைமைகள்தான் தென்படுகின்றன. 

குறிப்பாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உயரிய சபையான கவுன்சில் அங்கத்தவர்களில்கூட எங்களுடைய பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தேவையான எண்ணிக்கை ஒதுக்கீடு செய்திருக்கப்படவில்லை. இந்த விடயங்கள் சம்பந்தமாக பல்கலைக்கழக மானிய ஆணை குழுவுடன் கதைத்த போது அதற்கு உறுதியான விடைகள் எனக்கு கிடைத்திருக்கவில்லை. ஆகவே ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் இவ்வாறான ஓரங்கட்டப்படுகின்ற நிலைப்பாடுகள்தான் தென்படுகின்றன. ஆகவே அதனோடு இணைந்ததாக பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சனைகள் தொடர்பாகவும் நாட்டில் அடிக்கடி நடந்து கொண்டிருக்கின்றன.

அதற்கு அப்பாலும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் மக்களுக்காக செயற்பட வேண்டிய தேவை சட்டவிரோத சேவைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கிறது. அந்த விடயத்திலே நாங்கள் பலமுறை விடயத்தை சுட்டிக் காட்டி இருக்கின்றோம். அவர்கள் சொல்லுகின்ற பதிலானது அரச கட்சியிலே இருக்கின்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்புத் தேவையில்லை என குறிப்பிடுகின்றார்கள். அது அவர்களுடைய தனிப்பட்ட விடையமாகவே அவர்கள் பார்க்க வேண்டும். இந்த விடயத்திலே அவர்களுக்கு கிடைக்காத விடையங்கள் எதிர்க்கட்சியிலே இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்க கூடாது என்ற மனநிலையானது மிகப் பாரதூரமான இது ஒருதலைபட்சமானது. இதனை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குகின்ற பொழுது ஆளுங்கட்சியில் இருக்கின்ற உறுப்பினர்கள் அதனை ஒரு வித்தியாசமாக பார்ப்பார்கள் என்ற நிலைப்பாடு முக மோசமானது. 

விரும்பியவர்கள் விண்ணப்பிக்கின்ற பொழுது கடந்த காலங்களில் பாதுகாப்பு வழங்கப்பட்டது போன்று வழங்கப்பட வேண்டியது வழக்கம். இப்போதுகூட ஜனாதிபதி பிரதமர் சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே சமச்சீரான முறையில் பாதுகாப்பு பிரச்சனை இருக்கின்ற அல்லது பாதுகாப்பு கூறுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியது சபாநாயகரின் உடைய மிகப்பெரிய பொறுப்பாகும்.

இந்த விடயத்திலே அரசாங்கம் மிகத் தட்டிக் கழிக்கின்ற போக்கை காணப்படுகின்றது மூன்று மாத காலம் ஆகியும் அதற்குரிய தீர்மானத்தை எடுக்க முடியாத அளவுக்கு அரசாங்கம் ஒரு இயக்கமற்ற நிலையிலேயே இருக்கின்றது என்ற கேள்வியையும் நாம் எழுப்பத் தோன்றுகின்றது. 

ஆகவே நாம் அசாதாரண சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன நீதிமன்றத்தில்கூட சூட்டுச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. பல இடங்களிலேயே குடும்பங்களில் இருக்கின்ற குழந்தைகள் பாதாள உலகம் கோஷ்டிகள் என சந்தேகிக்கப்படுகின்ற அவர்களால்கூட சூட்டுக்கிலக்காகின்ற நிலைமை இருக்கின்றது. ஆகவே பாதுகாப்பு விடயத்திலே அரசு அசமந்த போக்குதே இல்லாமல் மிக விரைவாக பாதுகாப்பை வழங்கப்பட வேண்டும்.

நீதியை பொறுத்தவரையில் சொல்வார்கள் தள்ளிப் போகின்ற நீதி, அது கிடைக்காத நீதிக்கு நீதிக்கு சமன் என கூறுவார்கள். அது போன்றுதான் பாதுகாப்பும் உரிய காலப்பகுதியில் வழங்கப்படாத பாதுகாப்பு ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்த பின்னர் அது பற்றி ஆராய்வதைவிட முன்கூட்டியே ஆயத்தமாக இந்து செயற்பாடுகளை செய்ய வேண்டிய பொறுப்பும் இருக்கின்றது அந்த விடயத்தில் அரசாங்கம் மிகவும் கவன குறைவாகவும் பொறுப்பெற்ற விதத்திலேயும் இயங்குகின்றது என்பது ஆகும். 

தொடர்ச்சியாக மட்டக்களப்பு பிரதேசத்திலும் வாள்வட்டு சம்பவங்கள் வன்முறை சம்பவங்கள் தலை தூக்கி இருக்கின்றன. ஆகவே புதிய அரசாங்கம் எந்த விடயங்களிலேயே கூடுதல் நிலைப்பாட்டுடன் செல்கின்றது என்பதை பூரண எதிர்பார்ப்புடன் அல்லது மனநிறைவுடன் கூற முடியாது உள்ளது.

அரசியல் தீர்வு திட்டம் ஆரம்பிக்கப்படவில்லை வரவு செலவுத் திட்டத்தில் போதிய அளவு நிதியதுக்கீடு இல்லை பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கின்றன. இவ்வாறான விடயங்களிலே தமிழ் மக்கள் மிகத் தெளிவான ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள். கடந்த அரசாங்கங்களைப் போலவே தமிழ் மக்களுக்கான பாரபட்சமான நடைமுறை தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அரசாங்கம் பேச்சளவிலே மாத்திரம் தமக்கு சமத்துவத்தைப் பற்றி கூறிக் கொண்டிருந்தாலும்கூட செயல்முறையில் அவ்வாறான விடயங்கள் நடைபெற்று இருக்க வில்லை. என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொண்டு வருகின்ற எங்களுடைய பிரதேச சபை தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். 

தமிழ் தேசியத்தை பாதுகாக்கின்ற தமிழ் மக்களுடன் இணைந்து இருக்கின்ற தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கின்ற தமிழ் மக்களின் கலாசாரத்தையும் வாழ்விடத்தையும் நிலத்தையும் பாதுகாக்கின்ற தமிழரசுக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டிய உறுதியான நிலைப்பாட்டை எமது மக்கள் எடுக்க வேண்டிய தருணம் ஆகும் அதுதான் வருகின்ற பிரதேச சபை தேர்தலாகும். 

நாடு முழுவதும் வன்முறைகள் இருந்தன,ணு ஊழல்கள் இருந்தன, இவற்றை தீர்க்கும் என்ற அடிப்படையிலேயே அரசாங்கத்திற்கு வாக்களித்திருக்கின்ற அதேவேளை தமிழ் பிரதேசங்களில் மக்கள் தமிழ் மக்களுக்கான உரிமை நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற அடிப்படையிலே பல இடங்களிலேயே வாக்களித்திருந்தார்கள் அந்த விடயத்தைகூட இந்த 100 நாட்களில்கூட செய்ய முடியாத அல்லது அதற்கு அது தொடர்பான உறுதிப்பாட்டை வழங்க முடியாத நிலையே அரசாங்கம் இருக்கின்றது.

முழுமையான விடயங்களில் செய்து முடிக்க விடயங்களை இருந்தாலும்கூட அதற்கான உறுதிப்பாட்டை வழங்கக்கூடிய ஒரு உறுதியான நிலையை அரசாங்கம் வழங்கி இருக்க வேண்டும். நாங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களிலே பாராளுமன்றத்திலும் பொது இடங்களிலும் இது தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்துக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறான கோரிக்கைகளிலே இவ்வாறானவற்றை முன்வைப்பதில் பாரிய பின்னடைவுகள் இருக்கின்றன. உண்மையாகவே நாங்கள் இந்த விடயத்தை முன் வைப்பதற்கு அப்பால் அரசாங்கமே அவர்களுடைய கட்சி உறுப்பினர்களை இவ்வாறான செயற்பாடுகளை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. 

எப்போதும் அந்த விடயங்கள் தட்டிக் கழிக்கின்ற பொழுது செயலாற்ற முடியாமல் போகின்ற பொழுது நாங்கள் எங்களது மக்கள் சார்பான விடயங்களை உறுதியாக முன்னெடுத்தவர்கள் என்ற வகையில்கூட அதற்கான உறுதிப்பாட்டை அரசாங்கம் தரதவறுகின்றது.

ஆகவே தமிழ் மக்கள் மிகவும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தருணம் வந்திருக்கிறது மக்களுடைய தெளிவான முடிவை வருகின்ற தேர்தல்களில் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் எனவே மக்களுடன் பயணிக்கின்ற தமிழரசு கட்சிக்கு மக்கள் உறுதியான ஆதரவை வழங்க வேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.







SHARE

Author: verified_user

0 Comments: