16 Mar 2025

மட்டக்களப்பு கல்லடிப்பாலம் அருகில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

SHARE

மட்டக்களப்பு  கல்லடிப்பாலம் அருகில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடிப்பாலம் அருகில் ஞாயிற்றுக்கிழமை (16.03.2025) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடி, ஊர் வீதி, முகைதீன் தைக்கா பள்ளி வாயல் பேஷ் இமாம்  42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான மெளலவி எம்.எஸ்.எம். ஸபீர் என்பவரே உயிர் இழந்துள்ளார். 

கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த அரச போக்குவரத்து பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின்பக்கமாக இருந்து இவர் பயணித்த போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. 

மோட்டார் சைக்களை செலுத்திய நபர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்த நபர் தனது இரு கண்களும் பார்வையற்ற விசேட தேவையடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு போக்குவரத்து பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.















SHARE

Author: verified_user

0 Comments: