விசேட பாதுகாப்புக்கு மத்தியில் உள்ளூராட்சி
மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல்.
விசேட பாதுகாப்புக்கு மத்தியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி தினத்தில் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு நகரில் வியாழக்கிழமை(20.03.2025) உள்ளூராட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் இறுதித் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்ததை காணக் கூடியதாக இருந்தது நகரின் முக்கியமான இடங்களில் பொலிசார் பாதுகாப்பு பணிகளில் அமர்த்தப்பட்டு இருந்தனர் இதேவேளை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் மட்டக்களக்களப்பில் பழைய மாவட்ட செயலகத்தை அண்டிய வளாகங்கள் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
தேர்தல் கடமைக்காக அனுமதி வழங்கப்பட்டிருந்த ஊழியர்கள் மாத்திரம் உட்செல்ல அனுமதி அனுமதிக்கப்பட்டிருந்தனர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் பெறும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களுக்கு விசேட அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்ட பின்னரே மாவட்ட செயலகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் குறிப்பிட்ட
பிரதேசத்திற்கு அப்பால் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இதன்போது இறுதி தினத்தை முன்னிட்டு
மாவட்ட செயலகத்துக்கு வரும் வாகனங்கள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே உட்செல்ல அனுமதிக்கப்பட்டன
விசேட வீதி போக்குவரத்து நடமாடும் பொலிசாரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment