இதுவரைகாலமும் இடைநிறுத்தப்பட்டிருந்த
மண்டூர் - மட்டக்களப்பு பேரூந்து சேவை இன்று மீண்டும் ஆரம்பித்து வைப்பு.
இதுவரைகாலமும் இடைநிறுத்தப்பட்டிருந்த மண்டூர் பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரைக்கும் இடம்பெற்று வந்த இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சேவை மீண்டும் இன்று சனிக்கிழமை(01.02.2025) அதிகாலை 6 மணிக்கு மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மண்டூர் பகுதியிலிருந்து இவ்வாறு இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சேவை 1976 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வந்துள்ளது. இவ்வாறு இடம்பெற்று வந்த இப்பேரூந்து சேவை கடந்த 7 வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்த போக்குரவத்தை மீண்டும் ஏற்படுத்தித் தருமாறு அப்பகுதி மக்கள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீறிநேசனிடம் கோரிக்கைக்கு முன்வைத்திருந்தனர். அதற்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீறிநேசன் இலங்கப் போக்குவரத்து சபையின் கிழக்கு பிராந்திய முகாமையாளர் மற்றும் களுவாஞ்சிகுடி சாலை முகாமையாளர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு மண்டூர் பகுதி மக்களின் கோரிக்கையை எடுத்தியம்பியதற்கிணங்க இன்றயதினம் இந்த போக்குவரத்து சேயை மீண்டும் இலங்கை போக்குவரத்து சபையின் களுவாஞ்சிகுடி சாலையினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மண்டூர் பகுதி மக்கள் மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து நடைபெற்று வரும் குருமண்வெளி – மண்டூர் படகுப் பதையில் பயணம் செய்து களுவாஞ்சிகுச் சென்று பின்னர் அங்கிருந்தே மட்டக்களப்பு நகர்ப்பகுதிக்குச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் தடைப்பட்டிருந்த இந்த போக்குவரத்துசேவை
மீண்டும் ஆரம்பிக்கப்பட்டள்ளதையடுத்து அப்பகுதி மக்கள் நன்றி தெரிவிக்கின்றர்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீறிநேசன், இலங்கை போக்குவரத்து சபையின் களுவாஞ்சிகுடி சாலை முகாமையாளர் பூ.கோகுலவேந்தன், மற்றும் அப்பகுதி பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment