கிளீன் ஸ்ரீலங்கா வேலத்திட்டத்தின்கீழ்
மட்டக்களப்பு விசேட பொருளாதார மத்திய நிலையம் திறந்து வைப்பு.
அந்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமைத்துவ சபை தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி.ஜே.N;ஜ.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவருமான கந்தசாமி, பிரபு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம், மற்றும் அரச அதிகாரிகள், திணைக்களங்களின் அதிகரிகள், வர்த்தகர்கள், வியாபாரிகள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
அரசாங்கத்தின் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் 300 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிழக்கு மாகாணத்தைமையப்படுத்தி மட்டக்களப்பு களுதாவளையில் நிரமாணிக்கப்பட்டுள்ள இந்த விசேட பொருளாதார மத்திய நிலையம் கடந்த 7 வருடங்களாக மக்கள் பாவனைக்கு விடாமல் இருந்து வந்துள்ளது. களுதாவளைப் பிரதேச விவசாயிகள் மிளகாய், மத்தரி, பயற்றை, வெங்காயம், மரவள்ளி, உள்ளிட்ட பல மேட்டுநில பயிரினங்களை அதிகளவு உற்பத்தி செய்து வருவதுடன் வேளண்மைச் செய்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்றயதினம் அரசாங்கத்தின் கீறீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இக்குறித்த விசேட பொருளாதார மத்திய நிலையம் திறந்து வர்த்தக நடவடிக்கைகளுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment