1 Feb 2025

கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில் கிளீன் ஸ்ரீலங்கா திட்டப் பணிகள் மட்டக்களப்பு மாநகர சபையினால் ஆரம்பித்து வைப்பு.

SHARE

கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில் கிளீன் ஸ்ரீலங்கா  திட்டப் பணிகள் மட்டக்களப்பு மாநகர சபையினால் ஆரம்பித்து வைப்பு.

அரசாங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஒரு கட்டமாக கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பெயரில் சனிக்கிழமை(01.02.2025) மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. 

இதேவேளை சனிக்கிழமை மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்களால் நகரின் மத்தியில் காணப்படும் களியங்காடு செம காலை மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் தலைமையில் பாரிய  சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது. 

பெரிய நிலப்பரப்பில் அமைந்து காணப்படும் இப்பகுதி ஆனதே அண்மையில் ஏற்பட்ட அடை மழை காரணமாக பற்றைக் காடுகள் வளர்ந்து டெங்கு நோய் பரவும் விதமாக இப்பகுதி காணப்பட்டதை அடுத்து இப்பகுதியை அண்டிய மக்களின் சுகாதார நலனை கொண்டு இந்த சிரமதான பணி  முன்னெடுக்கப்பட்டது. 

அரச அலுவலகங்கள் ஆலயங்கள் குடியிருப்புகள் பகுதியில் காணப்படுவதால் இந்த சிரமமான பணி முன்னெடுக்கப்பட்டது.  

இறுதி கிரிகைகளுக்காக வரும்  மக்களின் சுகாதார பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு அதிக அளவிலான மாநகர சுகாதார ஊழியர்கள் பங்கு பெற்றவர்களுடன் இந்த பாரிய சிரமகன பணி இதன்போது முன்னெடுக்கப்பட்டமை விசேட அம்சமாகும் குறிப்பிடத்தக்கதாகும்.









SHARE

Author: verified_user

0 Comments: