மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்போக
அறுவடை போது எதிர் பார்த்த விளைச்சல்
கிடைக்க வில்லை – விவசாயிகள் ஆதங்கம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்போக அறுவடை போது எதிர் பார்த்த விளைச்சல் கிடைக்க வில்லை பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் அதற்குரிய நஷ்ட ஈடுகளை தந்து தவுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பெருநிலப்பகுதியில் பெரும்போக வேளாண்மை செய்கை அறுவடையின்போது விவசாயிகள் பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தால் அதற்குரிய நஷ்ட ஈடுகளை தந்துதவுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். மாவட்டத்தில் கடந்த வருட இறுதியிலும், இவ்வருட ஆரம்பதிலும் ஏற்பட்ட அடை மழை, மற்றும் வான்கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாகவும், வேளாண்மைச் செய்கை வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட இந்நிலையில் அதிலிருந்து எதிர்பார்த்த அறுவடை கிடைக்காமலுள்ள இந்நிலையில் அறுவடை செய்யப்பட்ட மீதமான நெல்மணிகளில் கறுத்த புள்ளிகள் மற்றும் நிறை குறைவாகவும் அதிகம் பதராகவும் காணப்படுவதனால் இம்முறை எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை. பாதிப்புக்கு உள்ளான தமக்கு, உரிய நஷ்ட ஈட்டை தந்து உதவுமாறு அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
கடந்த வருடம் ஏக்கருக்கு 30 மூடைகள் கிடைத்த போதும் தற்போது 15 மூடைகள் அளவில் கிடைப்பதாகவும், விவசாயிகள், கவலை தெரிவிக்கின்றனர். தாம் வங்கிகளில் நகைகளை அடகு வைத்து கடைகளில் எண்ணை, பசளைகளை, கடனுக்குப் பெற்றுள்ள போதும் தற்போது அதற்குரிய அறுவடை இலாபத்தினை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் எனவே ஜனாதிபதி விவசாயிகளின் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு தங்களுக்குரிய இழப்பீடுகளை தந்து உதவுமாறு இப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெரும் போக அறுவடை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் அண்மை காலங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் மற்றும் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக தற்போது விவசாயிகள் எதிர்பார்த்த அறுவடை கிடைக்கப்பெறவில்லை. வயல்கள் ஈரமாக காணப்படுவதனால் அறுவடை செய்வதில் பெருத்த சிரமங்களை எதிர்கொள்வதாகவும் போது படுவான்கரை பெருநிலப் பகுதிகள் விவசாயிகள் அறுவடை பணிகளில் ஈடுபட்டு கொண்டிருப்பதை காணக் கூடியதாக உள்ளதுடன், வியாபாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று தங்களுக்கு வேண்டிய அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிகின்றது.
0 Comments:
Post a Comment