உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களுக்கு
25 வீதம் வட்டாரங்கள் ஒதுக்கப்படல் வேண்டும்.
உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களுக்கு 25 வீதம் வட்டாரங்கள் ஒதுக்கப்படல் வேண்டும். பெண்கள் அரசியலில் பயணிக்க வேண்டும் பெண்களின் பங்களிப்பு அரசியலில் முக்கியமானது என பலரும் குரல் கொடுத்து வருவானது வரவேற்கத்தக்கதாகும்.
என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் அணி செயலாளர் சுசிகலா அருள்தாஸ் தெரிவித்துள்ளார் வியாழக்கிழமை(27.02.2025) இவ்விடையம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார் இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
பாராளுமன்றத்திற்கு அதிகளமான பெண்கள் பிரதிநிதித்துவம் செல்ல வேண்டுமாக இருந்தால் ஆரம்ப கட்டமாக வரஇருக்கின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பெண்களுக்கு முக்கியமான ஒன்றாகும். அவ்வாறான தேர்தல்களிலே முகம் கொடுக்கின்ற பெண்கள்தான் பாராளுமன்ற மாகாண சபைகளிலும் செல்லக்கூடியதாக வாய்ப்புகள் அமையும்.
அந்த வகையிலே 25 வீதம் பெண்களுக்கு என உள்ளூராட்சி மன்றங்களில் வட்டாரங்கள் குறித்தது வேண்டும். அவ்வாறு ஒதுக்கப்படும் நேரங்களில்தான் ஏதோ ஒரு வகையிலே ஒரு பெண் பிரதிநிதியாவது உள்ளுராட்சி மன்றங்களுக்கு செல்லக்கூடியதாக இருக்கும்.
அந்த வகையில் இவ்வாண்டு நடைபெற இருக்கின்ற
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்களுக்கு என 25 வீதம் வட்டாரங்கள் குறித்த தொகுக்கப்பட
வேண்டும் என எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணி வேண்டுகோள்
விடுக்கின்றது. என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment