7 Feb 2026

சர்வதேச தொழுநோய் தினத்தினை முன்னிட்டு களுவாஞ்சிகுடியில் விழிப்புணர்வு வீதி நாடகம்.

SHARE

சர்வதேச தொழுநோய் தினத்தினை முன்னிட்டு களுவாஞ்சிகுடியில் விழிப்புணர்வு வீதி நாடகம்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச தொழுநோய் தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைக்கு முன்பாக விழிப்புணர்வு வீதி நாடகம் இன்றயதினம் சனிக்கிழமை(07.02.2026) நடைபெற்றது. 

இதன் போது தொழுநோய் தொடர்பாக மக்களுக்கு தெழிவூட்டும் துண்டுப்பிரசுரங்களும் பொது மக்களுக்கு வினியோகிக்கப்பட்டன. குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






















SHARE

Author: verified_user

0 Comments: