அரச தாதியர் சங்கத்தினர் களுவாஞ்சிக்குடி
ஆதார வைத்தியசாலையில் போராட்டம்.
2025 வரவு செலவுத் திட்டத்தில் தன்னிச்சையாக கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாக வியாழக்கிழமை(27.02.2025) ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளதையடுத்து, இட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு எதுவித பாதிப்புமின்றி தாம்எதிர்ப்பினை முன்னெடுத்ததை அவதானிக்க முடிந்தது.
வியாழக்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை மதிய உணவு வேளையில் போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தின் உப தலைவர் நாலக ஹெட்டியாராச்சி தெரிவித்திருந்தார்.
இதேவேளை, மேலதிக நேர வரம்பு பிரச்சினையை முன்வைத்து வியாழக்கிழமை கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹனவும் தெரிவித்திருந்தார்.
0 Comments:
Post a Comment