தனிநபர் சுகாதாரம் மருத்துவ சான்றிதழ்
இன்றி விற்பனையில் ஈடுபட்ட 11 வெதுப்பக உரிமையாளர்களுக்கு
சட்ட நடவடிக்கை பொதுச் சுகாதார பரிசோதகர் கஜானன்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் முச்சக்கர வண்டிகளில் வெறுப்பக உணவு வகைகளை முச்சக்கர வண்டிகளில் விற்பனை செய்துவரும் 11 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் கஜானன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் அனைவரம், வெதுப்பக் தனிநபர சுகாதாரம், மருத்துவ சான்றிதழ் இன்மை போன்ற பல காரணங்களுக்காகவே பொதுச் சுகாதாரர்களால் இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெதுப்பக உரிமையாளர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதேச சபையில் இடம்பெற்றது. அதன்போது அனைத்து வெதுப்பக உரிமையாளர்களுக்கும் தேவையான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருந்தன. அந்த ஆலோசனைகளை அவர்கள் மீறி இவ்வாறு செயற்பட்டதன் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டமை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் கஜானன் மேலும் தெரிவித்தார்.
.png)
.png)
0 Comments:
Post a Comment