27 Feb 2025

ஊடக ஒழுக்க நெறி மற்றும் ஊடக பயன்பாடு தொடர்பில் பிரதேச ஊடகவியலாளர்களை தெளிவூட்டும் விஷேட செயலமர்வு

SHARE

ஊடக ஒழுக்க நெறி மற்றும் ஊடக பயன்பாடு தொடர்பில் பிரதேச ஊடகவியலாளர்களை தெளிவூட்டும் விஷேட செயலமர்வு மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வியாழக்கிழமை (27.02.2025) நடைபெற்றது.

அரச தகவல் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வில் ஊடக நெறிமுறைகள், பிரதேச ஊடகங்களின் வகிபாகம், கிளீன் ஸ்ரீ லங்கா, தேசிய அபிவிருத்தி மற்றும் வரவு செயலவுத் திட்டம் 2025 ஆகிய விடயங்கள் தொடர்பாக அறிவூட்டப்பட்டது.

அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார, மாவட்ட. மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந், தகவல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சுமித் திலகரட்ன, மொறேவெவவ பிரதேச செயலாளர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட தகவல் பொறுப்பதிகாரி வீ. ஜீவானந்தன், விடிவெள்ளி பத்திரிகை ஆசிரியர் எம்.வி.எ.பைறுஸ் பிரதேச ஊடகவியலார்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர். 

இச்செயலமர்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பத்து பேர் கௌரவிக்கப்பட்டனர்.

 














 



SHARE

Author: verified_user

0 Comments: