19 Jan 2025

மட்டக்களப்பில் தொடர்ந்து பலத்த மழை குளங்களின் நீர்மட்டங்கள் அதிபரிப்பு.

SHARE

மட்டக்களப்பில் தொடர்ந்து பலத்த மழை குளங்களின் நீர்மட்டங்கள் அதிபரிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, பட்டிப்பளை, காத்தான்குடி, மட்டக்களப்பு நகர், ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் ஞாயிற்றுக்கிழமை(19.01.2025) காலையிலிருந்து மாலை வரைக்கும் பலத்த மழை பெய்து வருகின்றது. 

இதனால் மாவட்டத்தில் மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்ளவதிலும் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றர்.

இந்நிலையில் களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு, வெல்லாவெளி, பழுகாமம், போதீவு, குருமண்வெளி, உள்ளிட்ட பல பகுமிகளிலுமுள்ள கிராமியக் குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிந்து வருகின்றன. 

எனினும் கிராமங்களிலுள்ள பெரும்பாலான உள்வீதிகள் வெள்ள நீரினால் மூழ்கப்பட்டுள்ளனதனால் உள்ளுர் போக்குவரத்துச் செய்வதிலும் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஞாயிஇற்க்கிழமை காலை 8.30 மணிதொடக்கம் மாலை 5.30 மணிவரையில் 57.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. 

இது இவ்வாறு இருக்க ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிவரையில் உள்ளிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 33அடி 10அங்குலம், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 17அடி 3அங்குலம், கட்டுமுறிவுக் குளத்தின் நீர்மட்டம் 12அடி 8அங்குலம், கித்துள்வெவ குளத்தின் நீர்மட்டம் 12அடி 3அங்குலம், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 16அடி 11அங்குலம், வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 13அடி 5அங்குலமாகவும் உயர்ந்துள்ளதாகவும் அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்பாசனப் பொறியிலாளர்கள் தெரிவித்துள்ளர்.















SHARE

Author: verified_user

0 Comments: