18 Jan 2025

கைபேசிகளை பார்த்துக் கொண்டிருப்பதற்கும், அங்கும் இங்கும் திரிவதற்கும் இனிமேலும் நாம் விடப்போவதில்லை

SHARE

இனிமேலும் வீதியோரங்களில் இருந்து கொண்டு கைபேசிகளை பார்த்துக் கொண்டிருப்பதற்கும், அங்கும் இங்கும் திரிவதற்கும் இனிமேலும் நாம் விடப்போவதில்லை -   தேசிய மக்கள் சக்தியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளர் அலைக்சாண்டர்.

இளைஞர்கள் வெறுமனே வீதியோரங்களில் இருந்து கொண்டு கைபேசிகளை மாத்திரம் பார்த்துக் கொண்டிருப்பதற்கும், அங்கும் இங்கும் திரிவதற்கும் இனிமேலும் நாம் விடப்போவதில்லை. அவர்கள் அனைவருக்கும் வேலைத்திட்டங்களை வழங்கவுள்ளோம். அவர்களுக்குரிய வேலைத்திட்டங்களை வழங்கி வருமானங்களை ஏற்படுத்திவிட்டால் யாரும் கைபேசிகளைத் தட்டிக் கொண்டிருப்பதற்கும், அங்கும் இங்கும் அலைந்து திரிவதற்கும் நேரமிருக்காது.                

என தேசிய மக்கள் சக்தியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளர் சின்னச்சாமி அலைக்சாண்டர் தெரிவித்துள்ளார். 

வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளின் கீழ் தேசிய மக்கள் சக்தியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருக்கும், அப்பகுதி பிரதேச இளைஞர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று வெள்ளிக்கிழமை(17.01.2025) மாலை களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் ஒருவரின் இல்லத்தில் இடம்பெற்றது.   

தேசிய மக்கள் சக்தியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளர் சின்னச்சாமி அலைக்சாண்டர் தலைமை நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் ஆதரவாளர்கள், அங்கத்தவர்கள் மற்றும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் யுவதிகள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது பட்டிருப்புத் தெகுதியில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள், கல்வி கற்றுவிட்டு வீட்டிலிருக்கம் இளைஞர் யுவதிகளின் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற பல விடையங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டன. 

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைப்பாளர் வெறுமனே இனிமேலும் வீதியோரங்களில் இருந்து கொண்டு கைபேசிகளைமாத்திரம் பார்த்துக் கொண்டிருப்பதற்கும், அங்கும் இங்கும் திரிவதற்கும் இனிமேலும் நாம் விடப்போவதில்லை. அவர்கள் அனைவருக்கும் வேலைத்திட்டங்களை வழங்கவுள்ளோம். அவர்களுக்குரிய வேலைத்திட்டங்களை வழங்கி வருமானங்களை ஏற்படுத்திவிட்டால் யாரும் கைபேசிகளைத் தட்டிக் கொண்டிருப்பதற்கும், அங்கும் இங்கும் அலைந்து திரிவதற்கும் நேரமிருக்காது. 

பெண்களுக்கும் முன்னுரிமை வழங்கி கிராமப்புறங்களில் குழுக்களை உருவாக்கி இவ்வாறான செயற்றிட்டங்களை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு நாம் தயாராகவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

 












SHARE

Author: verified_user

0 Comments: